archiveநான் மீடியா

உலகம்உலகம்

அமெரிக்கா, சீனா அதிபர்கள் தொலைபேசி மூலம் பேச்சு- நேரில் சந்திக்க ஒப்புதல்

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து...
இந்தியா

மாணவனை வகுப்பறையிலேயே மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை…! வீடியோ வைரல்

ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயலே மற்ற ஆசிரியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார். இதையடுத்து...
இந்தியா

நர்சுக்காக எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு- விற்பனையாளருக்கு குவியும் பாராட்டு

கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு. இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த நர்சு சந்தியா என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவார். கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு கவரில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர்,...
தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர்...
தமிழகம்

ஆடி அமாவாசை | ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை தினத்தில் புனித தலமான ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரள்வார்கள் என்பதால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவிலிருந்தே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம்...
சினிமா

கேட்டதும் கழட்டி காட்டிய ஷெரின். பிகினி வீடியோ கண்டு கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்

ஷெரின் வெளியிட்ட ஏடாகூடமான வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்! பிரபல மாடலான ஷெரின், 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஷெரின். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் இளம் வயதிலே நடிக்க துவங்கி விட்டார். பின்னர் ஏனோ சினிமா பக்கம் சில காலம் தலைகாட்டாமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே...
சினிமா

‘கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்… மோஷன் போஸ்டருடன் வெளியான புதிய அறிவிப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என பெயரிடப்பட்டு உள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில்...
உலகம்உலகம்

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பூங்காவில், ஓக் மரங்களில் சமீபத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கும் பரவியது.அந்த தீ, 48 சதுர கி.மீ., துாரத்துக்கு பரவி, நேற்று முன்தினம் மிகப்பெரிய காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போது வரை, அதை அணைக்க முடியவில்லை. இதில், அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள்...
விளையாட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில் அசத்தல்தமிழக வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில், ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டினார்.மாலத்தீவில், 54வது 'மிஸ்டர் ஆசியா' ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 15ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தன.இதில், இந்தியா உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று அசத்தினர். போட்டிகள், ஜூனியர், மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன்...
விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சென்னைக்கு வருகை புரிந்த 12 வீரர்கள்…. வெளியான தகவல்

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா...
1 461 462 463 464 465 539
Page 463 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!