archiveசிறுகதை

சிறுகதை

மறக்குமா உந்தன் முகம்

ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம் அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள், கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம், குளத்தங்கரை யில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில், அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான்....
சிறுகதை

ஒப்பாரி

வாத்தியார் பொண்டாட்டி சாந்தி ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்காததை பார்த்த பக்கத்துவீட்டு ராமம்மாள் , சாந்தி .....சாந்தி ....என்று அதை பிடித்து உலுக்கினாள் . சாந்தியின் அது ராமம்மாள் பேச்சை கேட்கவில்லை . அவள் உலுக்கியதால் உடல் லேசாக ஆட்டம் கொடுத்தது . உடல் சில்லிட்டு போயிருந்தது. “அய்யய்யோ” என்று பீரிட்ட குரல் கேட்டு எதுத்த வீட்டிலிருந்த சாந்தியின் தங்கை லட்சுமி “என்னாடி என்னா….” என்று அலறி வீட்டுக்குள் பாய்ந்தாள்....
சிறுகதை

வாரிசு

திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கணபதி. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “லஷ்மி! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் லக்ஷ்மி. நாட்கள் ஓடின. மகன் ஹரி பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்....
சிறுகதை

முதுமையிலும் நேசம் வரும்…

ஞானாம்பாள் வயது எழுபது இருக்கும்.  முகத்திற்கு மஞ்சள் பூசி, வட்ட பெரிய பொட்டியிட்டு, நரைத்த முடியினை கொண்டையிட்டு, சிறு பூ முடிந்து, நூல் புடவை கட்டி எளிமையான தோற்றமுஉடையவர். "மதியம் சாப்பாடு சமைத்து வை டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன்னு" சொல்லி விட்டுப் போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்... டிங்... டாங்... அழைப்பு மணி ஓசை ஒலித்தது. "மணி 3.30 ஏன் இவ்வளவு நேரம்" என்று கேட்டுக்...
சிறுகதை

மீகாமன்

“என்னங்க! இந்த ரோட்டைப் பார்த்தீங்களா? பளபளன்னு என்னமா பாலிஷ் பண்ணி வச்ச்சிருக்காங்க பாருங்க! இப்படித்தான் எல்லா ரோடும் இருக்குமாங்க, குஜராத்தில? அதனாலதான், ஒரு அலுங்கல், குலுங்கல் இல்லாம, பஸ் போறதைப் பாருங்க!” தன்னுடைய கணவரிடம் சற்று சத்தமாகவே, உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அந்த வயதான பெண்மணி. அவளும், அவளின் கணவரும் வயதில் மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக, தனியார் சுற்றுலா ஏஜன்ஸி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த...
சிறுகதை

மனைவி அமைவதெல்லாம் …

நிறைமாத கர்ப்பிணியான பார்கவியை அவளது கணவர் வசீகரன் துரிதப்படுத்தினான். பார்கவி சீக்கிரம் கிளம்பும்மா, ஆஸ்பிட்டல் செக்கப் முடித்துவிட்டு அப்படியே சிறந்த பேச்சாளர் தேர்வுக்கான மீட்டிங் செல்லவேண்டும் மறந்துட்டியா என்றான். இதோ கிளம்பிட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே ரெடியாயிடுவேன். ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ளாஸ்க்ல 'கொஞ்சம் வெந்நீர் எடுத்து வைங்க வசி' என்றாள் பார்கவி. பார்கவி பெயருக்கு ஏற்றார் போல கவிதை நடையாலும் பேச்சுத்திறனாலும் உலகையே (பார்) வெல்லும் அளவிற்கு பெயர்பெற்றவள்....
சிறுகதை

பணத்தால் அடித்தாலும் வலிக்கும்

''நீ சின்ன பொண்ணும்மா... உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.” “அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன...
சிறுகதை

சாலியின் பொதுத்தேர்வு பயணம்

பர்வீன் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரின் அன்பு கணவர் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு வாரிசுக்கு ஒரு மகன் சாலி, ஆசைக்கு ஒரு மகள் ஜீனத் உண்டு. தான் உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர். சாலி மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். ஆறாம் வகுப்பு 'E' நிலையில் படிக்கும் மாணவன்....
சிறுகதை

பெற்றால் தான் பிள்ளையா?

" நீயும் வந்துட்டு வாயேன் பவி".. என்றான் சந்திரன். 'அதெல்லாம் வேண்டாம்..நீங்க மட்டும் போயிட்டு வாங்க..' என்றாள் பவித்ரா. 'ஜனனியாவது கூட்டிட்டு போயிட்டு வரேன்..' என்றான் சந்திரன். 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சின்ன பிள்ளையை அங்கெல்லாம் கூட்டிட்டு போய்கிட்டு..' வழக்கம் போல சிடுசிடுத்தாள் ... பவித்ரா. பேச ஒன்றும் வழி இல்லாமல் சரி என்றான் சந்திரன். புருஷோத்தமன் - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் சந்திரன். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும்...
சிறுகதை

அவனின் கனவு இவளின் நிலை

கோவிலூர். கோவிலூர் என்ற பெயருக்கேற்றாற்போல் கோவில்கள் நிறைந்த ஊர். கோவிலுக்கு அருகாமையில் குளம், குளத்தை சுற்றி வீடுகள், எங்கும் பசுமை, விவசாயம் பயிரிடும் மக்கள், அமைதியான ஊர் என செழுமையாக இருந்தது. சுருள் சுருளான தலைமுடியும், அடர்ந்த புருவமும், வசீகரிக்கும் கண்களும், சாந்தமான முகமும் கொண்ட இளைஞன் சுதன். நன்றாக பாடும் திறமைசாலியும் கூட. Jதினமும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறான் அவள் கண்களுக்கு கண்மை தீட்டவில்லை,...
1 2 3 7
Page 1 of 7

Right Click & View Source is disabled.

error: Content is protected !!