இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட கைலி பாடல் 'பா மியூசிக்' யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது. ஓர் ஆணின வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. இந்த உணர்ச்சிகளின் கோர்வையை, இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் திறம்பட இப்பாடலில் கொண்டு வந்திருக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகள், கைலியுடனான ஒரு ஆண்மகனின் வாழ்நாள் பயணத்தின் பல...
திரை விமர்சனம் : இன்பினிட்டி - ஏதோ ஆங்கில பெயரில் தலைப்பு வைத்துவிட்டு, தமிழ் பெயரில் கதாப்பாத்திரங்களின் பெயர்களை உலவ விட்டு நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பு. மென்பனி - தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். எவ்வி இளவளவன் – சிபிஐ அதிகாரி பெயர். ஆதவன், தமிழினி, நந்தினி - இப்படி வழியெங்கும் தமிழ் பெயர்கள். பெயர்களில் காட்டிய அக்கறையை படக்குழுவினர் கொஞ்சம் கதைப்பக்கமும், திரைக்கதை பக்கமும் திருப்பி...
திரை விமர்சனம் : ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கிய தேவை கதை. கதையில்லாமல் தடுமாறும் படங்களுக்கு மத்தியில் கதையுடன் கூடிய ஒரு திரைப்படம்.. பம்பர் - திரைப்படம் அறம் சார்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையும், அறம் சார்ந்து வாழும் போது கிடைக்கும் சிக்கல்க்ளையும் பேசுகிறது. இயக்குனர் M செல்வகுமார் கதையை மிக அழகாக கொண்டு செல்லும் பங்கை பாராட்டலாம். மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் தான். சந்தர்ப்பம் சூழ்நிலையால் மட்டுமே அவர்கள் மாறுகிறார்கள்...
இயக்குநர் பா. ரஞ்சித் , இயக்குநர் மாரி. செல்வராஜ் இரண்டு பேருமே எப்படியாவது என்னை வலுக்கட்டாயமாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் . காலதாமதமாகத் தான் படம் பார்ப்பது வழக்கம். எல்லோரும் பார்த்து விமரிசனம் எழுதிய பிறகு படத்தைப் பார்ப்பதற்கு நான் ஆர்வம் காட்டுவது பொதுவாக இல்லை. ஆனால் இந்த முறை எல்லோரும் சொல்லுகிறார்களே என்பதற்காக மாமன்னன் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தேன் .மாரி...
வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத்...
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'லாந்தர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விதார்த், சுவேதா டோரத்தி,விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படம் - புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக புதிய கோணத்தில் உருவாக உள்ளது. இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் 'லாந்தர்' என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம்...
யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்', மற்றும் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா நடிக்கும் திரைப்படம் தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கின்றனர். இவற்றில் முதல் திரைப்படமான யோகி பாபு, லக்ஷ்மி மேனன் முதன்மை இடங்களில்...