archiveகோமதி

கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை உயிராக.... கண்டேன் அழகிய உலகம் உன்னில்... மகிழ்ந்தேன் உன் தாயாக.... வாழ்வை வசந்தமாக்கிய அழகு தேவதையே....உன் அன்பு அத்தனையும் தருவாயா எல்லையில்லாமல்.... வாழ்வேன் தொல்லையில்லாமல்...!!! கோமதி, காட்பாடி...
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில், குயிலின் இனிய கானத்தில், ஆர்ப்பரிக்கும் அருவியின் கம்பீரத்தில், சலசலக்கும் ஓடையில் துள்ளிகுதிக்கும் மீன்களின் எழிலில், வெண்பனி இரவின் முழுமதி அழகில், மயக்கும் வேய்ங்குழலோசையில், கள்ளமில்லா பிள்ளைச்சிரிப்பழகில் நின் முகவடிவே கண்டேனடா...... என் மாயக்கண்ணா.......!!! கோமதி, காட்பாடி...
கட்டுரை

அடம் பிடிக்கும் குழந்தையும் தடுமாறும் சமூகமும்

அச்சோ.....என்ன அழகா கல்யாணம் பன்னி வைங்கன்னு கேட்டு அடம்பிடிக்குது இந்த சின்னக்குட்டினு எல்லோரும் இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து வைத்திருப்போம்.என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஆனா கல்யாணம்னா என்னனு அந்தக் குழந்தைக்கு எப்படிங்க தெரியும்.இப்படிலாம் பேச வைத்து பெரியவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர். A,B,C,D முழுமையாக சொல்லத் தெரியுமா அந்தக் குழந்தைக்கு? https://www.youtube.com/watch?v=NXAUfe9mlHo குழந்தைகள் வளரும்போது தன்னை சுற்றியுள்ள சூழல்களை பார்த்து கற்று வளர்கிறார்கள். அவர்கள்...
கட்டுரை

லுங்கிக்கும் பெண்களா – கொஞ்சம் வாதம் நிறைய விவாதம்

தாய்ப்பாலும் வியாபாரமாகிவிட்ட இந்த விளம்பர உலகத்தில் பெண்களை காட்சிப்பொருளாக வைத்து பெரும்பான்மையான விளம்பரங்கள் வெளிவருகின்றன. ஒரு குறிப்பிட்ட வாசனைத்திரவியத்தை ஆண் பயன்படுத்தினால் அந்த வாசனையில் பெண்கள் மயங்கி அவனிடம் செல்வது போல சித்தரிக்கும் விளம்பரம்.ஆணின் உள்ளாடை விளம்பரத்திற்கும் பெண்களை காட்சி பொருளாக்கியிருப்பார்கள்.லுங்கி விளம்பரத்திற்கும் பெண்கள்.ஒரு இருசக்கர வாகன விளம்பரத்தில்,அந்த இருசக்கர வாகனத்திற்கு மயங்கி பெண்களெல்லாம் அந்த வாகனத்தின் பின்னே ஓடுவதைப்போன்ற காட்சி.சோப் விளம்பரத்தில் இந்தப் பெண்கள் ஏன்தான் இவ்வளவு விரசமாக...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!