செல்வி சிவஞானம்-கவிதை
மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு ஓடுவேன் எங்கள் தோட்டம் கடந்து செட்டியார் வயல் பார்த்தால் இல்லை கெண்டைக்கால் உயரமுள்ள சோலக் காட்டிற்குள் மேய்ந்தால் தெரியும், அங்கும் இல்லை... மூச்சிரைக்க வரப்போறம் ஓடி இரு ஆளுயர கரும்பு காட்டிற்குள் போக பயந்து ஓ வென அழுமென் குரல் கேட்டு ஓடி வந்து என் முகம் பார்த்து...