கவிஞர் பாக்கி கவிதைகள்
உனக்காக கவிதை எழுதினேன் நமக்காக காதல் எழுதினேன் இதில் என்ன பிழை இரவில் வாசித்த கனவுகளெல்லாம் பகலில் கவிதையாகி போனது அவளால்... அவள் இதழின் ஈரம் வாங்கி என் இதயத்தின் தாகத்தை தீர்த்துக் கொண்டேன்... ஆயிரம் ரோஜாக்களை முத்தமிட்டாலும் எதுவும் உன் இதழ்களுக்கு ஈடாகாது... இதயம் மாற்றும் அன்பு சிகிச்சைதான் காதல் அவளுக்காக நானும் எனக்காக அவளும் பிரிந்திருந்தது ஒன்றாய் துடிக்கிறோம்... அவள் நெற்றியில் வைத்த முத்தம் அந்த நிலவில்...