வேள்பாரியும், அதனால் விளைந்த இலக்கிய எழுச்சியும்
" பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப்புலவர், பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே " - கபிலர். கடந்த 2016 அக்டோபர் 20ஆம் தேதி ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் திரு சு. வெங்கடேசன் அவர்கள் எழுதி, ஓவியர் மணியம் செல்வன் அவர்களின் ஓவியங்களுடன் வெளிவந்தவன் தான் " வீரயுக நாயகன் வேள்பாரி". எப்பவும் போலான தொடராக தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல்...