காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்
இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை. அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல் துறை சார்ந்த துயரங்களை ஒரு காவல் துறைப் பணியாளரே கவிதையில் எழுதுவதென்பது இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அதனை மா.ஆனந்தன் (வசந்தன் )சாத்தியமாக்க முயற்சித்துள்ளார். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு மாதாந்திர நாள்காட்டியின் சிவப்பு நிற விடுமுறை நாட்களை நம் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் ஒரு காவல் துறை...