ஒரு பக்கக் கட்டுரை : நன்றி மறவேல்
நெல்லை கவி க.மோகனசுந்தரம் நன்றி இது வெறும் மூன்றெழுத்து சொல்லல்ல. நான்கெழுத்தில் இருக்கும் உணர்வு. நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதில்லை நன்றி கடன் என்பது. செய்நன்றி அறிதல் என்பதற்கு ஒரு அதிகாரத்தையே 11 இல் அய்யன் தந்திருக்கிறார் என்றால் நன்றியின் அருமையை உணரலாம். நன்றி என்பது பெற்றதற்காக அல்ல கொடுத்த உள்ளத்திற்காக. நன்றி என்பதை சொல்லி விடுவதோடு நிறுத்தி விடாமல் உங்களை நிலை நிறுத்திக் காட்டினால்தான் அந்த...