கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக நடத்தப்பட்ட எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு
கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது. பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்திமிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் நம்பிக்கை. கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி...