சமூக அக்கறை கொண்ட படமாக “அம்மா உணவகம்”
சமூக அக்கறையும் சகமனிதன் மீது பேரன்பும் கொண்ட ராஜகிருஷ்ணா தன் இளைய மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மற்றொரு வாடகை வீட்டில் பல்வேறு கனவுகளோடு பல தரப்பட்ட மனிதர்களும் வாடகைக்கு குடி இருக்கிறார்கள். இவர்களது இயல்பு நிலைவாழ்க்கை கொரோனா பேரிடர் காலத்தில் மோசமாக பாதித்து உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இவர்களின் இலட்சியங்களும் கனவுகளும் பிரதிபலிக்கும் விதமாக எதார்த்தமான முறையில் படம்பிடித்துள்ளார் இயக்குனர் விவேகபாரதி. வெங்கட்பிரபு கதாநாயகனாக நடித்த...