மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் அருகே உள்ள நஞ்சுண்டலிங்கேஸ்வரர் கோவிலில் வளாகத்தில் உள்ள மரத்தில் 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கிட்டு சடலமாக கிடப்பதாக அவனியாபுரம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகிகளிடம் இறந்த நபர் யார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையில் அவனியாபுரம் பெரியசாமி நகர் 2வது தெருவை சேர்ந்த தாசரி என்பவர் அது மகன் நாராயணன் என்றும் அவரது வயது 68 என்று தெரியவந்தது இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இதனால் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததால் இன்று (03/11/2202) மாலை வீட்டில் மறுபடியும் தகராறு செய்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் திட்டியதால் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்