வாரிசு
திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கணபதி. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “லஷ்மி! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் லக்ஷ்மி. நாட்கள் ஓடின. மகன் ஹரி பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்....