துபாயில் “எளியோர் எழுச்சி நாள்” விழா திமுக அயலக அணி கொண்டாட்டம்! அமீரகத் திமுக அமைப்பாளார் , எஸ். எஸ். மீரான் ஏற்பாடு.
துபாயில் 27/11/24 புதன் கிழமை அன்று, அமீரகத் திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் 'கேக்' வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவுக்கான சிறப்பு அலங்காரமாகக் கறுப்பு, சிவப்பு பலூன்களால் புதுமையாகவும் வித்தியாசமாகவும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமீரகத் திமுக அமைப்பாளரும்,அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் அவர்களின்...