தமிழகம்

தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை நடத்திய முப்பெரும் இலக்கிய விழா

258views
25.01.2026 அன்று மார்டன் சிட்டி, பட்டாபிராம், சென்னை – 600072 இல் தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை நடத்திய எழுத்தாளர் சாந்தாதத் நூலகத் திறப்புவிழா, பேரவை ஆண்டுவிழா மற்றும் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் இலக்கிய விழா சிறப்புடன் நடைபெற்றது.

கலைமாமணி, சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் (தலைவர், அனைத்திந்திய தமிழ் சங்கம்) தலைமையேற்க, ஓவியக் கவிஞர் அமுதபாரதி, கவிஞர் சு. சுப்புராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பெண்களின் மங்கல விளக்கு ஏற்றலுடன் தொடங்கிய விழாவில், எழுத்தாளர் சாந்தாதத் தன்முனைக் கவிதைகள் நூலகம் திருநின்றவூர் முழுநேரக் கிளை நூலகர் தமிழ்த்திரு சுரேஷ் பாபு அவர்கள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ‘அன்பின் சங்கமம்’ குழுவில் தன்முனைக் கவிதை எழுதப் பயிற்சி பெற்ற இளங்கவிஞர்களின் ‘தன்முனைக் கவியரங்கம்’ கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜு அவர்களின் தலைமையில் மிகவும் சுவையாக நடைபெற்றது.
நூல்கள் வெளியீடு :

இம்முப்பெரும் விழாவில் பின்வரும் பத்து தன்முனைக் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன:
1.நானிலு நூறு – மொழிபெயர்ப்பு நூல் தெலுங்கு மூலம்: டாக்டர் N. கோபி
தமிழ்: எழுத்தாளர் சாந்தாதத்
2. சிற்றுளியின் செதுக்கல்கள் (Carvings of a Tiny Chisel)
தமிழ்: சு. பிரவந்திகா
ஆங்கிலம், கன்னடம், இந்தி மொழிபெயர்ப்பு:
முனைவர் வே. புகழேந்தி
3. எளிய தன்முனை – எனக்குக் கொடுப்பினை (அனுபவக் கட்டுரைகள்)
தொகுப்பாசிரியர்கள்: அன்புச்செல்வி சுப்புராஜூ, ராஜூ ஆரோக்கியசாமி
4.சாந்தாதத் தன்முனைக் கவிதை நூலகம்
ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா
5.தன்முனைத் தேனடை
ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா
6. எழுதுகோல்களின் எண்ணங்கள் (திறனாய்வுக் கட்டுரைகள்)
தொகுப்பாசிரியர்: அன்புச்செல்வி சுப்புராஜூ
7. எட்டே மெய்ப்பாடென்ப…
தொகுப்பாசிரியர்கள்: அன்புச்செல்வி சுப்புராஜூ, தா. உமா
8. கவிநிலா கவிதைகள்
ஆசிரியர்: கவிதா குமாரி
9. திருக்குறளும் தன்முனைக் கவிதையும்
ஆசிரியர்: லாவண்யா மணிமுத்து
10.மின்மினிப் பூச்சியின் வெளிச்சம்
ஆசிரியர்: ஒரத்தநாடு நெப்போலியன்

கவிஞர் சு. சுப்புராஜூ அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, கவிஞர் கவிதா குமாரி அவர்கள் எழுதிய “கவிநிலா கவிதைகள்” நூல் அன்பின் பரிசாக வெளியிடப்பட்டது. அமரர் ஒரத்தநாடு நெப்போலியன் அவர்கள் எழுதிய “மின்மினிப் பூச்சியின் வெளிச்சம்” சமர்ப்பண நூலாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப் பட்டது.

தன்முனைக் கவிதை வகையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பு செய்த கவிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!