செய்திகள்தமிழகம்

இராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை துவங்கம்… மதிப்பு கூட்டபட்ட பொருட்கள் விற்பனை..

53views

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உழவர் சந்தை கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதே முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

இந்த உழவர் சந்தை துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த உழவர் சந்தையில் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்த்த விவசாயிகள் மற்றும் சுயஉதவி குழுவைச் சேர்ந்தவர்களும் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் மாலை நேரத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் 4 மணி முதல் 8 மணி வரை உழவர் சந்தை செயல்படுத்த வேண்டும் என வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இராஜபாளையம் உழவர் சந்தையில் 4:00 மணி வரை 8 மணி வரை விற்பனையை இன்று வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் துவங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் முனைவர் ரமேஷ் .மற்றும் உழவர் உற்பத்தியாளர் பிளவக்கல் உழவர்கள் இராஜபாளையம் துல்லிய பண்ணையர்கள் சிவகாசி வெண்முகில் உழவர்  உற்பத்தியாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்

இந்த மாலை நேர உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களில் முழுமையாக பயன்படுத்தி வாலிமை படுத்த வேண்டும் என விருதுநகர் விற்பனைச் செயலாளர் கேட்டுக்கொண்டார் மாலை நேர உழவர் சந்தையில் அரிசி சிறுதானியம் பயிர் வகைகள் சமையல் எண்ணெய் நாட்டுக்கோழி முட்டை காளான் மற்றும் இதரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் சுயஉதவிகுழுவில் உள்ள காய்கறி கடைகளும் செயல்பட்டு வருகிறது இது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் பகலில் செயல்படும் காய்கறி கடைகள் மாலை நேரங்களில் செயல்பட வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!