கட்டுரை

தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றும் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி

755views
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு என்கின்ற கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் ராமலிங்கம் சீதாலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த ரவிச்சந்திரன் இளம் வயதிலேயே தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டிருந்ததால் தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் இலக்கியம் படித்து முதுகலை தமிழ் இலக்கியம் சென்னை புதுக்கல்லூரியில் படித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றி தமிழ் சேவை புரிந்து அங்கு தான் கற்றதையும் பெற்றதையும் தம் சொந்த மண்ணில் விதைத்து விருட்சமாக்கி தன் மண்ணின் மைந்தர்களை உலக அளவில் உயர்த்தி பிடிக்கும் உன்னதமான நோக்கத்தில் தன் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகில் தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளியை தொடங்கி கடந்த ஏழு வருடமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சீத்தாராமின் சிறப்பு அம்சங்கள்
• இன்றைய தருணத்தில் பெரும்பாலான பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் கேட்பாளராக மட்டுமே இருந்து வருகின்றனர். இந்த வகுப்பறைகளில் 75% ஆசிரியர்களின் திறமை மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வகுப்பறைகள் தன்னம்பிக்கை மிக்க மாணவர்களை உருவாக்குவது என்பது எளிதல்ல. சீத்தாராம் பன்னாட்டு பள்ளி ஒரு புதிய யுத்தி முறையை அறிமுகம் செய்து அதன் பயனையும் அறுவடை செய்து உள்ளது.அதாவது நமது சீதாராம் பன்னாட்டு பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களை தோண்டுகின்ற வகையிலும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் வினாக்களை எழுப்பி மாணவர்களை படைக்கத் செய்வார்கள் வினவ செய்வார்கள் பகிர செய்வார்கள் இதன்மூலம் பயிற்றுவித்தல் முறையில் மாணவர்களுடைய ஒரு தரமான வளர்ச்சியை இந்த தரணிக்கு அறிமுகம் செய்து வருகிறது.

• வினாக்களை வினவுவது என்பது ஒரு கலை கேட்கப்படும் வினா மாணவர்களின் மனதிலே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும் அவ்வகையில் கீழ்கண்ட நான்கு வகையான வினாக்களை வினவும் உத்தி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
• புத்தாக்க சிந்தனையை தூண்டும் வினா
• பிரச்சனைக்கு தீர்வு காணும் வினா
• உச்ச சிந்தனையை தூண்டும் வினா
• நினைவு கூறும் வினா
• இரண்டாவதாக இன்றைய தருணத்தில் இந்த போட்டி மிகுந்த உலகில் திறனாய்வு போட்டிகளில் கலந்து வெற்றி வேண்டும் என்றால் கருத்தறிதல் முறையை கையாண்டு மாணவர்களிடையே கருத்தறிதல் திறனை வளர்த்தால் மட்டுமே முடியும்.அந்த வகையில் நமது சீத்தாராம் பன்னாட்டு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே கருத்தறிதல் திறனை வளர்த்து Comprehension என்கின்ற கருத்தறிதல் திறனை ஆறாம் வகுப்பில் இருந்தே பயிற்றுவித்து வருகிறோம்.

• இன்றைய கல்விமுறை என்பது மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டும் மையமாகக் கொண்டுள்ளது இதன் விளைவாக மாணவர்கள் பாடங்களை பத்தி பத்தியாக படித்து அப்படியே பத்தி பத்தியாக எழுத செய்து மதிப்பெண்ணை எடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கல்விமுறை ஏட்டுச் சுரக்காய் போன்றது. மாறாக நமது சீத்தாராம் பன்னாட்டு பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் உயர் சிந்தனையை தூண்டவும், problem solving skills என்று சொல்லக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகளையும் பாடத்தோடு இணைத்து கற்பித்து வருகிறோம்.

• ஒரு நாட்டை அழிப்பதற்கு அறிவியல் அணுகுண்டுகளோ ஆராய்ச்சிகளோ தேவையில்லை தரம் இல்லாத கல்விகளை கொடுத்துக் கொண்டே இருந்தால் அந்த நாடு தானாகவே அழிந்து போய்விடும் என்பதை நாம் கேட்டிருக்கிறோம் படித்திருக்கிறோம் அந்த அடிப்படையிலே ஒரு தரமற்ற கல்வியை கொடுப்பதனால் இன்றைக்கு எல்லா துறைதோறும் வேலியே பயிரை மேய்தார் போன்று நம்மால் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட தவறுகளை இனிமேலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நம் கல்வி அணுகுமுறையை மாற்றம் செய்தே தீர வேண்டும் அந்த அடிப்படையில் தான் இங்கே சீத்தாராம் பன்னாட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது.
• பாடப்புத்தகத்தில் உள்ளது அப்படியே விலக்கி கூறிவிட்டு செல்வது சரியான கற்பித்தல் அன்று மாறாக பாட புத்தகத்தை ஆயுதமாக கொண்டு மாணவர்களை தோண்ட வேண்டும் அதுதான் உண்மையான கற்பித்தலாகும்.

• பாட புத்தகத்தை பயன்படுத்தி மாணவர்களின் அறிவினை தோண்டவேண்டும் அப்படி என்றால் (Out of box) புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை கற்பனை வளத்தோடும் அன்றாட வாழ்வோடும் தொடர்பு படுத்தி கற்பிக்க வேண்டும்.
சீத்தாராமின் வெற்றி பயணம்
கல்வி என்பது திணிப்பதோ ஊட்டுவதோ அல்ல அதையும் தாண்டி மாணவர்களிடம் மறைந்திருப்பதை தோண்டி எடுப்பதை உண்மையான கல்வியின் பொருளாகும் கற்றல் கற்பித்தலை பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்த முடியும் .உதாரணத்திற்கு வகுப்பறை கற்றல் ,வகுப்பிற்கு வெளியே கற்றல் விளையாட்டு முறையில் கற்றல் சுற்றுலா சென்று கற்றல் ஒப்படைப்பு கற்றல் தகவல் தொழில்நுட்பம் மூலம் கற்றல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இவற்றுள் முதன்மையாக நிற்பது வகுப்பிற்கு வெளியே செயல்முறை விளக்கத்தோடு கற்பது இச்செயல்முறை விளக்கத்தோடு கற்பது என்பது மாணவர்களுக்கு இடையே மாணவர்களுடைய மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அழுத்தமாக நம்பிக்கை உதாரணத்திற்கு மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஐயா ஏற்படுத்தும்மறைந்திருப்பதை தோண்டி எடுப்பதே உண்மையான கல்வியின் பொருளாகும்.

கற்றல் கற்பித்தலை பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்த முடியும் உதாரணத்திற்கு வகுப்பறை கற்றல், வகுப்பிற்கு வெளியே கற்றல் ,விளையாட்டு முறையில் கற்றல் , சுற்றுலா சென்றுக் கற்றல் ஒப்படைப்பு கற்றல் ,தகவல் தொழில்நுட்ப மூலம் கற்றல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவற்றுள் முதன்மையாக நிற்பது வகுப்பிற்கு வெளியே செயல்முறை விளக்கத்தோடு கற்பது. இச்செயல் முறை விளக்கத்தோடு கற்பது என்பது மாணவர்களுடைய மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உதாரணத்திற்கு மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஐயா திரு APJஅப்துல் கலாம் அவர்கள் தனது இந்நிலைக்கு காரணத்தை குறிப்பிடும்போது தனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான சீனிவாச ஐயரை தான் குறிப்பிடுகிறார். ஏனென்றால் விமானத்தை பற்றி விளக்கம் நோக்கத்தில் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு பறந்து சென்ற பறவைகளை காண்பித்து அதை விமானத்துடன் ஒப்பிட்டு விளக்கியபோதுதான் தனக்கே ஒரு விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாக கூறி இருக்கிறார். அந்த அடிப்படையில் நம் பள்ளியில் இருந்து வருங்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்தில் 100 மாணவர்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவில் கடந்த கடந்த ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை (30.07.2023)காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட PSLV -C56 ராக்கெட்டை நேரடியாக காண அழைத்துச் சென்றோம் மேலும் மாணவர்கள் மண்ணிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு பரவளியை நோக்கி பறந்து சென்ற ராக்கெட்டை பார்த்து பரவசமடைந்து, மாணவர்கள் வந்தே மாதரம் என்று உரக்க கூறி ஊக்கம் பெற்றதை உணர முடிந்தது. நாம் இந்தியன் என்கின்ற பெருமிதத்தை மாணவர்களின் கண்களில் காண முடிந்தது இந்த பயணத்தின் வாயிலாக தன்னம்பிக்கையும் நாட்டுப்பற்றையும் அறிவுத் தேடலையும், மாணவர்களிடையே விதைத்தோம் , மேலும் அறிவியல் தேவையறியாத , ஆங்கில வாடை அறியாத கிராமத்து மாணவர்களுக்கு இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி பெருமிதம் கொள்கிறது.
இப்படிக்கு
பள்ளிமுதல்வர்
இரா.ரவிச்சந்திரன் MA,BEd,PGTE(சிங்கப்பூர்)

Right Click & View Source is disabled.

error: Content is protected !!