ஆன்மிகம்

காணிக்கை 1 : தினந்தினந்தோறும் எந்த நேரமும் எம்மானே உமை நினைத்தேன்

42views
பாடல்: முஹம்மது மஹ்ரூஃப்
தினந்தினந்தோறும் எந்த நேரமும் எம்மானே உமை நினைத்தேன்
இன்றில்லை நாளை என்றேனும் உங்களைக் கனவினில் நான் காண்பேன்
நேசத்தினால் என்றும் யான் பாடுவேன்
நேசத்தினால் என்றும் யான் பாடுவேன்
புவி வாழும் காலம் அண்ணல் நபியே
தினந்தினந்தோறும் எந்த நேரமும் எம்மானே உமை நினைத்தேன்
இன்றில்லை நாளை என்றேனும் உங்களைக் கனவினில் நான் காண்பேன்
காலையிலும் மாலையிலும் நபியுங்கள் ஸலவாத்து
ஓதிடுவேன் ஆண்டவனும் பொருந்திட எதிர்பார்த்து
நாவிலும் நரம்பிலும் நாதரும் காதலே
எண்ணமும் ஏக்கமும் ஏந்தலும் தேடலே
எம்மனமும் கேட்கிறதே
அனுதினம் எதிர்பார்க்கிறதே
திருகாட்சி இன்று தருவீரா
இரு கண்குளிர வருவீரா
(தினந்தினந்தோறும்)
பத்ரினிலும் உஹதினிலும்
கலந்திட பிறக்கவில்லை
ஹிஜ்ரத்திலே உடன் நடக்கும்
வாய்ப்பினை அடையவில்லை
மாமதினாவிலே வாழ்ந்திடும் வாய்ப்பில்லை
எம்மதி நாவிலே நீரின்றி வேறில்லை
இந்த உம்மத்திலே பிறந்ததுவே
அது உலகினில் உயர்ந்ததுவே
உமிழ் நீரும் கூட இனித்திடுமே
உம்மி உங்கள் பெயர் உரைத்ததுமே
(தினந்தினந்தோறும்)
மறுமையிலே திடலினிலே
யானங்கு வருகையிலே
கவ்சரிலே பானத்தையே
அருந்திட அழைத்திடனும்
மீஸானின் அருகிலும்
பாலத்தின் நெடுகிலும்
எடைகளும் கூடவும்
விரைவிலே கடக்கவும்
உங்கள் அருகினில் இருந்திடனும்
ஏடு வலக்கரம் அடைந்திடனும்
நீங்கள் பரிந்துரை செய்ததுமே
ஏகன் மன்னிப்பையும் வழங்கிடவே
தினந்தினந்தோறும் எந்த நேரமும் எம்மானே உமை நினைத்தேன்
இன்றில்லை நாளை என்றேனும் உங்களைக் கனவினில் நான் காண்பேன்
நேசத்தினால் என்றும் யான் பாடுவேன்
நேசத்தினால் என்றும் யான் பாடுவேன்
புவி வாழும் காலம் அண்ணல் நபியே
தினந்தினந்தோறும் எந்த நேரமும் எம்மானே உமை நினைத்தேன்
இன்றில்லை நாளை என்றேனும் உங்களைக் கனவினில் நான் காண்பேன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!