616
சு.சமுத்திரம் எழுதிய “ஒரு கோட்டுக்கு வெளியே ” நாவல் ‘உலகம்மை’ திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த வி.ஜெயப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கௌரிகிஷன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றி மித்ரன், மாரிமுத்து, ஜி எம் சுந்தர், அருள்மணி, காந்தராஜ், பிரணவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு : கே. வி. மணி, வசனம்: குபேந்திரன், படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஷ் , கலை : வீரசிங்கம், பாடல்கள்: கவிஞர் முத்துலிங்கம், சரவணன், தயாரித்து இயக்கி இருக்கிறார் வி.ஜெயபிரகாஷ்.
இவர் ஏற்கனவே வெற்றித் திரைப்படங்களான சாதிசனம், காதல் FM, குச்சிஐஸ் போன்ற படங்களின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் செப்டம்பர் 22 அன்று உலகம் முழுதும் திரையிடக் காத்திருக்கும் இந்த படம் நேற்றைய சமூகத்தில் நிலவிய சாதிய கொடுமையின் செல்லுலாய்டு பதிவு.
எளிய மனிதர்களின் வாழ்வை அழுத்தமாய் சொல்லும் சமுத்திரத்தின் நாவலை திரையில் சமரசம் செய்துகொள்ளாமல் சொல்லி இருப்பதாக திரைக்குழுவினர் சொல்கின்றனர்.
‘இந்த படத்திற்கு இசைஞானியின் பாடல்கள் , பின்னணி இசை கூடுதல் பலம். கதாநாயகிக்கு நல்ல பெயரை இந்தப்படம் கொண்டு வந்து சேர்க்கும். மறைந்த திரைப்பட நடிகர் மாரிமுத்துவை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
உலகமெங்கும் உங்கள் உலகம்மையை கொண்டாட தயாராகுங்கள்’ என்கிறார் இயக்குனர் வி.ஜெயப்பிரகாஷ்.