சினிமா

Chennai world cinema festival நிகழ்வில் திரையிடப்பட்டது “கருவறை” குறும்படம்

253views
இ.வி கணேஷ்பாபு கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பில் உருவான கருவறை குறும்படத்திற்காக இந்த ஆண்டு ஸ்ரீகாந்த்தேவா தேசிய விருது பெறுகிறார்.
குழந்தையின்மையால் பல லட்சம் தம்பதிகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட பொருளாதாரப் பின்னடைவால் பல லட்சம் பெண்களுக்கு கருக்கலைப்பு நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கருவறை.

கருவுற்ற மனைவியை பார்த்து நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கக் கூடாதா என்று கேட்க அதற்கு மனைவி என்னது இதுல உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க… என்று சொல்லும்போது தியேட்டரில் கைதட்டு பலமாக கேட்கிறது.
இப்படி நிறைய இடங்களை சொல்லலாம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மனதை நெகிழ வைக்கிறது.
குத்துப்பாட்டுக்கு மட்டுமே சொந்தக்காரரான இசையமைப்பாளரை மனதை நெகிழ வைக்கும் இசையை கொடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
இனி ஸ்ரீகாந்த் தேவாவின் இசை பயணம் புதிய பாதையில் பரிணமிக்கும்.

என் கே ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ் கவி படத்தொகுப்பில் ரித்திகா, மீதுன், வடிவுக்கரசி, அஞ்சனாதமிழ்ச்செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
விரைவில் பிரபல ஒடிடி தளத்தில் இந்த குறும்படம் வெளியாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!