சினிமாவிமர்சனம்

“சமூகம் மீது இயக்குனருக்கு இருக்கும் அக்கறை”

238views
சான்றிதழ் : திரை விமர்சனம்
தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறுகிறது என்பது தான் கதை.
முதல் பாதியில் நம்மை ஆச்சர்யங்களுக்கு மத்தியில் மூழ்கடிக்க வைத்து கதை சொல்ல ஆரம்பிக்கின்றனர். இப்படியெல்லாம் ஒரு கிராமம் இருக்குமா என்று ஓவ்வொரு காட்சியும் நம் முன் கேள்வி எழுப்புகிறது.
கருவறை கிராமத்திற்கு ஜனாதிபதி விருது கிடைக்க அதை வேண்டாம் என மறுக்கும் கிராமவாசிகள் அதற்கு சொல்லும் காரணம் ‘அட’ என்று சொல்ல வைக்கிறது நம்மை.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையை நகர்த்தி செல்கிறது. அமைச்சர் வருகிறார், மீடியாக்கள் வருகிறது இப்படி எல்லாம் வந்தாலும் இடை இடையே நமக்கு சிரிப்பும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அந்த கிராமத்தின் மாற்றத்திற்கு வெள்ளைச்சாமிதான் காரணம் என்ற கேள்வியுடன் இடைவேளை வந்து இரண்டாம் பாதிக்கு எதிர்பார்ப்பை கூட்டி இருப்பதில் சீரியல் தனம் தெரிகிறது.
அதன் பிறகு கதையை நியாயப்படுத்த எல்லா கதாபாத்திரங்களையும் சகட்டுமேனிக்கு உல்டாவாக்கி இருப்பதில் ஐயோ பாவமாக இருக்கிறது. கதையின் முக்கிய கதாபாத்திரம் வெள்ளிசாமியின் மனைவியை கேவலமாக சித்தரிப்பதிலேயே தெரிந்துவிடுகிறது யாரைப்பற்றியும் தனக்கு அக்கறையில்லை தான் சொல்ல வந்த கருத்தை காம்பரமைஸ் செய்யாமல் சொல்வேன் என்று களமிறங்கி இருக்கும் புதுமுக இயக்குனரின் திறமை.
ஜனாதிபதி விருதை வாங்கிக் கொண்டதா அந்த கிராமம் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

வெள்ளைசாமியாக ஹரிகுமார் நடித்திருக்கிறார். ஊரை திருத்த அவர் எடுக்கும் முயற்சிகளும் கிளைமாக்ஸில் பேசும் வசனங்களும் படத்தின் மொத்த பலத்தையும் தன் முதுகில் சுமத்திருப்பதை வெளிப்படுத்துகிறார் மனிதர்.
வில்லனாக நடித்திருக்கும் அபுஹான் வரும் காட்சியில் ‘டான்’ என்று ஒலிக்கும் பின்னணி இசையும், கட்டி வைத்திருக்கும் முடியை அவிழ்த்துவிட்டு ஒரு சிலுப்பு சிலுப்பும் போது நம்மையும் அறியாமல் சிரித்து விடுகிறோம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தலைகாட்டி இருக்கும் கௌசல்யா, ரவிமரியா, மறைந்த மனோபாலா, ராதாரவி, இப்படி நிறைய நட்சத்திரங்களை அள்ளிப்போட்டு வெள்ளித்திரையை நிரப்பி இருக்கின்றனர்.
பைஜூ ஜேக்கப்பின் இசையில் ‘என் உறவா நீ கிடைச்சா போதும்’ ஒளிப்பதிவும், குரலும் பாடலும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ரகம்.

SS ரவிமாறன் சிவனின் ஒளிப்பதிவு, பாடல்களில் வெளிப்படும் சிரத்தை காட்சிகளில் எடுபடாமல் போவதற்கு அழுத்தமில்லாத கதையும் ஒரு காரணம்.
வெற்றிவேல் சினிமாஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் JVR என்ற ஜெயச்சந்திரன்.
ஒரு காட்சியில் பள்ளிக்கூட ஆசிரியர் தன் மாணவியிடம் செய்த பாலியல்
சீண்டலுக்கு தண்டனையாக அவரது மர்ம உறுப்பை வெட்டி கடாசுவது போல் சித்தரித்திருக்கும் காட்சியில் சமூகம் மீது இயக்குனருக்கு இருக்கும் அக்கறை புரிகிறது.
ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்ததற்காகவே சான்றிதழை பாராட்டலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!