சினிமாவிமர்சனம்

அநீதிகளுக்காக நியாயம் கேட்கும் திரைப்படம்

79views
அநீதி- திரை விமர்சனம் :
OCD  பிரச்சனையில்  சிக்கிக்கொண்டிருக்கும் கதாநாயகன். புட் டெலிவரி செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு பணக்காரர்களையே சுத்தமாக பிடிக்காது.
கோபம் உண்டாக்கும் யாரைக் கண்டாலும்கொன்றுவிட வேண்டும் என துடிக்கும் மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் மனநல  மருவத்துடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதாநாயகியை சந்திக்கிறார்.
கதாநாயகி வீட்டு வேலை செய்யும் வீட்டு முதலாளியம்மா எதிர்பாராமல் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு காரணம் யார் என்பதை  விசாரிக்கின்றனர்.  அந்த விசாரணையின் முடிவில் உண்டாகும்  திருப்பம் அதன் பிறகு ஏற்படும் சம்பவங்கள் தான் கதை.
சாக்லேட் கசக்கும் – என சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளாத ஹீரோ வளர்ந்து பெரியவனாகிற போது அவனை சுற்றியுள்ளவர்களால்  எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதை நுட்பமாக அவதானித்திருக்கிறார் இயக்குனர்.

எளிய மனிதர்களின் குரலாக மீடியாக்கள் எதை பேச  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி பேசியிருக்கும் படம்  அநீதி.
திருமேனியாக வாழ்ந்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.  சுப்புலக்ஷ்மியாக தன்னை ஒரு சிறந்த கதாநாயகியாக மீண்டும் நிரூபித்திருக்கிறார் துஷாரா விஜயன்.  கதாநாயகன் தந்தையாக வரும் காளி வெங்கட் , வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, போலீஸ்  இன்ஸ்பெக்டராக வரும் ஜே .எஸ்.கே.சதிஷ், போத்திராஜாக வரும் பரணி, அறந்தாங்கி நிஷா, வீட்டு முதலாளியம்மாவாக வரும் சாந்தா தனஞ்செயன், மளிகைக்கடை முதலாளியாக வரும் டி.சிவா  – இப்படி எல்லோரையும் சரியாக நடிக்க வைத்திருப்பது சிறப்பு.
SK ஜீவாவின் வசனம் எளிமை. அதே சமயம் காத்திரமானதாக இருக்கிறது. கதாநாயகியின் தந்தையாகவும் மனிதர் நடித்திருப்பது அருமை.  கோடம்பாக்கத்திற்கு   ஒரு நல்ல வசனகர்த்தா கிடைத்திருக்கிறார்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு, ரவிக்குமார் படத்தொகுப்பு, சுரேஷ் கல்லாரியின் கலை – இப்படி தொழில் நுட்பக்கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
GV பிரகாஷ் குமாரின் இசையில் திகட்ட திகட்ட காதலிப்போம் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய ரகம்.  அப்பாவுக்கும், மகனுக்குமான பாசத்தை வெளிப்படுத்த இயக்குனருக்கு பாடல் மூலம் துணிபுரிந்திருக்கிறார் ஜீவி.

வெயில், அங்காடித்தெரு, காவியநாயகன், அரவான்  கடந்த இன்னொரு வசந்தபாலன் திரைப்படமாக அநீதி வந்திருப்பது அழகு.
மேலிருக்கும் மனிதர்களை சர்வ சாதாரணமாக மன்னித்துவிடும் நம்மால் நமக்கு கீழிருக்கும் மனிதர்களை மன்னிக்க தயாராக இருப்பதில்லை என்பதை   அடிநாதமாக பேசுகிறது திரைப்படம்.
மொத்தத்தில் அநீதிக்காக நியாயம் கிடைக்க போராடுகிறது இந்த அநீதி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!