சினிமா

‘தக்ஷின்’ – தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சி மாநாடு – பத்திரிக்கையாளர் சந்திப்பு

120views
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தனியார்/பொதுத்துறைகள், சிறு, நடுத்தர தொழிலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய சுமார் 9000 நேரடி உறுப்பினர்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள 286 தொழில், வர்த்தக அமைப்புகளின் 300,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் பெற்ற அரசு சாராத, இலாப நோக்கற்ற, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.
இதற்கு இந்தியாவில் 62 அலுவலகங்கள், 10 சிறப்பு மையங்கள், 8 வெளிநாட்டு அலுவலகங்கள் உள்ளன. மேலும் 133 நாடுகளில் உள்ள 350 தொழில்த்துறை மேம்பாட்டு நிறுவனங்களுடன் சிஐஐ இணைந்து உள்ளது. இந்திய தொழில் மற்றும் சர்வதேச தொழில்/வணிக சமூகத்திற்கான ஒரு வலுவான அமைப்பாக சிஐஐ செயல்படுகிறது. இந்தியா G20 இன் தலைமைப் பொறுப்பை வகிக்கிற இந்த சந்தர்ப்பத்தில் சிஐஐ B20 க்கான செயலகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சிமாநாடான ‘தக்ஷின்’னின் முதல் நிகழ்ச்சியை சிஐஐ சென்னையில் 2022 ஆம் ஆண்டு நடத்தியது. இதில் 60 புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், OTT தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் தேசியத் தலைவர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட 700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் இந்தத் துறைக்கான மிகப்பெரிய நிகழ்வாக தக்ஷின் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தக்ஷினின் 2வது பதிப்பை ஏப்ரல் 19-20, 2023 தேதிகளில் சென்னை ஐடிசி சோலா கிராண்ட் ஹோட்டலில் நடத்த சிஐஐ ஏற்பாடு செய்துள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தக்ஷிணை திறந்து வைக்க இசைந்துள்ளார். முதலமைச்சருடன் மலேசிய அரசின் மனித வளத்துறை அமைச்சர் திரு வி சிவக்குமார், தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு எம் பி சாமிநாதன் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை மதிப்பாய்வு அமர்வில் (Valedictory Session) கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
சிஐஐ தென் மண்டல மீடியா மற்றும் பொழுதுபோக்குக்கான கமிட்டியின் தலைவரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் திரு டி ஜி தியாகராஜன் மற்றும் M&E துறையில் உள்ள புகழ்பெற்ற நிர்வாகிகளின் வழிகாட்டுதலோடு தக்ஷின் நடைபெறவுள்ளது.

‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற கருப்பொருளில் தக்ஷின் 2023 உச்சி மாநாடு தென்னிந்திய சினிமாவின் உலகளாவிய தாக்கம், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், பெண் சக்தி, சிறிய பட்ஜெட் படங்கள், தியேட்டர் மற்றும் சினிமா, OTT, புதுமையான கதைகளை உருவாக்குதல் / ஸ்கிரிப்ட் உருவாக்குதல் மற்றும் பிற முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்தும். இதில் சுமார் 50 பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முக்கியப் பேச்சுக்கள், குழு விவாதங்கள் மூலம் உலகளாவிய அளவுகளின் அடிப்படையில் M&E துறை முன்னோக்கி செல்ல தக்ஷின் வழிவகுக்கும்.

5 ஏப்ரல் 2023 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்வி பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்ற தக்ஷின் 2023 பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு டி ஜி தியாகராஜன், சுஹாசினி மணிரத்தினம், திரு. தனஞ்செயன் அம்மா கிரியேஷன் சிவா , தக்ஷின் 2023 வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டுஉரையாடினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!