மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அய்யனார் வயது 48 என்னும் கட்டிட தொழிலாளி தனது பணியை முடித்துக்கொண்டு இரவு ஏழு முப்பது மணி அளவில் காளவாசல் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்ற பொழுது .போடி லயன் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எதிரே வந்த அரசு பேருந்து முந்தி செல்வதற்கு முயற்சித்த பொழுது அய்யனாரின் இரண்டு சக்கர வாகனத்தில் மோதியதில் தலைக்கவசம் அணிந்திருந்தும் கூட தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் இதனை அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பணிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியில் இது முதல் விபத்தல்ல இந்த மாதத்தில் மட்டுமே மூன்று விபத்துக்கள் நடைபெற்று உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. மிக விரைவில் இந்த பாலம் ஒற்றை வழி பாதையாகவோ அல்லது பாலத்தை அகலப்படுத்தவோ வேண்டும் என்று அந்த வழியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
மாநகரின் முக்கிய சாலையாக இருக்கும் மேம்பாலத்தில் இதுபோன்ற விபத்துகள் பெருமளவு நடைபெற்று வருகிறது என்பதால் போக்குவரத்துபோலீசார் உரிய தீர்வு கண்டு விபத்தை தடுக்க பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கு மேல் இந்த மேம்பாலத்தில் நடைபெற்று வாகன ஓட்டிகள் உடல் உறுப்புகள் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்