கட்டுரை

அம்மாவின் கைநாட்டு, நூலாசிரியர் : ஆ கிருட்டிணன்

27views
நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன்
வாழ்த்துரை : மல்லை சத்யா அவர்கள், மல்லைத் தமிழ்ச் சங்கம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (ஆசியா) திராவிடர் வெற்றிக் கழகம்..
வாழ்த்துரை: தோழர் மருத்துவர் த. அறம் அவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
மு.முருகேஷ் அவர்கள், முதுநிலை உதவி ஆசிரியர், இந்து தமிழ் திசை- நாளிதழ், சென்னை.
பிருந்தா சாரதி அவர்கள், திரைப்பட இயக்குனர் .
ஓவியக் கவி நா. வீரமணி அவர்கள், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை, தூரிகை பதிப்பகம்
உடைத்துவிடாதே காற்றே
காதலுக்குச்சாட்சி
கிணற்று நிலா.
மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக மலரவைப்பதில் ஹைக்கூ முக்கிய இடத்தை வகிக்கிறது.
நிர்வாணமாய் குடிசைகள்
விண்ணில் பறக்கும் ஏவுகணை
வல்லரசு
அதிகார வர்க்கத்தின் புன்னகையின் தாடைகளை உடைக்கத் தவறவில்லை இவரது ஹைக்கூ.  ஆசிரியர் பதவியில் அமரவைத்த தாய்க்கு ஒரு ஹைக்கூ பரிசாக
என்னை ஆசிரியனாக்கி
அழகு பார்க்கும் மௌனமாய்
அம்மாவின் கைநாட்டு
வீடெங்கும் நிறைந்திருக்கும் அம்மாவின் கைரேகை மெழுகிய சாணத்தில்.
ஆ கிருட்டிணன்
இதுவரை தாயை இவ்வாறு எழுதியதாக எதுவும் நினைவில் இல்லை. எளிமையான வரிகளில் மனம் கவரும் ஹைக்கூ பூத்திருக்கின்றன கோடையின் மலர்கள் போல.  சமமற்ற தேர்வு முறையை வன்மையாகக் கண்டிக்கிறது இந்த ஹைக்கூ.
பச்சை மரங்களில்
கூர்தீட்டும் செங்கோட்டை
நீட்தேர்வு
என்பது எத்தனையோ இளங்குருத்துகளை பறிகொடுத்த தாய் தந்தைக்கு தெரியும் மனவலி இது சாகும்வரை ஆயுள் தண்டனை யல்லவா ? பெற்றோருக்கு. சிலைகளை வைப்பது பெரிதல்ல பராமரிப்பு அவசியம் என்கிறார் கவி.

பறவைகளின்
இலவசக் கழிப்பறை
தலைவர்களின் சிலைகள்.
ஏழைகளின்
பரமபத வாழ்வில் வெளிச்சம் கூட
வியாபரம் தான்
வீடெல்லாம் இருட்டு
அடகு கடையில் இருக்கிறது
அம்மாவின் மூக்குத்தி
என்பது ஒரு தலைமுறையின் வெளிச்சப்பூக்கள் மின்னி மறைந்த அவலம்.  மரணத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை தன் வரிகளால் மகுடம் தரிக்கிறார் கவி ஆ. கிருட்டிணன் அவர்கள்.
பல ஏக்கர் வாங்கிய வரை
வாங்கியது
ஆறடி நிலம்.
கடைசியாகக் கேட்கிறார் ஒரு கேள்வி அரசியலின் கள்ளத்தனங்களின் சரவெடிக்கு வைக்கப்படும் இந்தக் கேள்வியால் புஸ்வாணமாகும் உங்கள் மேடைகள்.
“ஒரே நாடு சரி
எப்போது கிடைக்கும
ஒரே சுடுகாடு”
இறந்த பிறகும் ஊரைச்சுற்றிச் செல்லும் அவலம் ஒரு நூற்றாண்டு ஆகியும் மலராத சமூக நீதியின் மொட்டுக்களை கொய்து விடும் சாதீயப்பெருமைகள் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது அவரவர் ஆணவப் பெருமையில்.

வெல்க சமூக நீதி. வாழ்க தமிழ். வெடித்து மலரட்டும் ஹைக்கூ மொட்டுக்கள்.

தயானி தாயுமானவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!