298views
இயந்திர மயமாக்கப்பட்ட இந்த உலகில் கிட்டத்தட்ட இயந்திரங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கும் மனித இனம் தங்களின் விலைமதிப்பில்லா உயிர் உறைந்திருக்கும் உடலின் நலத்தில் நலத்தில் கவனம் இல்லாமல் கடந்து கொண்டிருப்பது மிகவும் உற்று நோக்க வேண்டிய ஒன்று .
மனிதனின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு 63 வருடம் ஆக இருந்தது. கோவிட் காலத்திற்கு முன்பு 70 முதல் 75 வருடமாக உயர்ந்தது. தற்போது கோவிட் பாண்டமிக் பாதிப்பிற்கு பிறகு 67 வருடமாக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரம் நமக்கு சொல்ல வருவது ஒரு மனிதன் ஆரோக்கியமான சூழலில் தூய்மையான சுற்றுப்புறம், மருத்துவத் துறை முன்னேற்றம் மற்றும் நல்ல மனநிலையில் நீண்ட காலம் வாழ முடியும் என்பதே ஆகும்.
கால் நூற்றாண்டுக்கு முன்பை விட தற்போது மருத்துவத்துறை பல்வேறு முன்னேற்ற படிநிலைகளை அடைந்துள்ள போதிலும் கோவிட் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அதன் தாக்குதலுக்கு பிறகும் மனிதன் தன் ஆரோக்கியத்தை பேணுவது சவாலாகவே உள்ளது. மூன்று பக்கம் நீர் ஒரு பக்கம் நிலம் என்று படித்தது போல, முக்கால் பங்கு கணினி மையம் கால் பங்கு என்று மனித இனம் என்று ஏறத்தாழ சமயலறை முதல் போர்க்களம் வரை கணினி இல்லாத இடமே இல்லை என்றே கொள்ளலாம். எந்த அளவிற்கு தவிர்க்க முடியாத இன்றியமையாத முன்னேற்றமோ அந்த அளவிற்கு கவனிக்கப்பட வேண்டிய பாதிப்பு காரணியாகவும் (health hazard) கருதப்பட வேண்டும்.
இறைவன் படைத்த அனைத்திலும் மிகப்பெரிய அர்த்தம் இருக்கும். அதில் மிகச் சிறந்த படைப்பு நம் உடல். உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே! என்றார் திருமூலர். இதன் பொருள் உயிருக்கு உற்றத் துணையான உடம்பை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பைக் காத்தால் மட்டுமே உயிரைக் காக்க முடியும், மெய்ஞானம் ஆகிய பரம்பொருளை சேர முடியும் என்பதாகும் இக்கால தலைமுறையினர்கள் நிச்சயம் அறிய வேண்டிய திருமந்திரம் இதுவென்று அப்போதே பாடியுள்ளார் திருமூலர்.
பணிச் சுமைகளை சுமக்கும் இயந்திர மனிதர்களான நாம் நம் உடலையும் மனதையும் பேணிக்காக்க சில வழிமுறைகள்…
1. உடற்பயிற்சி
2. ஆரோக்கியமான உணவு 3. உறக்கம்
4. குடும்பம் மற்றும் நண்பருடன் தரமான நேரம் (Quality Time)
உடற்பயிற்சி:
நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ வாய்ப்பில்லையா இல்லை தவற விட்டோமோ என்ன தெரியவில்லை ஆரோக்கியமான வாழ்வியலை இழந்த நாம் அடிப்படை உடற்பயிற்சிகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் உடற்பயிற்சியின் வகைகள்
1.ஏரோபிக்ஸ்: எடுத்துக்காட்டு நடைப்பயிற்சி, ஓடுதல், நீச்சல், நடனமாடுதல், மிதிவண்டி ஓட்டுதல், படிக்கட்டு ஏறுதல். பயன்கள்: இருதய மற்றும் நுரையீரல் இயக்கங்கள் சீராக வைத்தல். ரத்த ஓட்டத்தை சீராக்குதல்
2. பலப்படுத்துதல் (strength training) எடுத்துக்காட்டு: மிதமான எடை தூக்குதல் ரெசிஸ்டன்ஸ் பேண்ட் டிரைனிங், push ups, pull ups squats
பயன்கள்: தசை மற்றும் எலும்புகளை பலமாக்குதல்
3. சமநிலை பயிற்சிகள்(Balance training) எடுத்துக்காட்டு :ஒற்றை காலில் நிற்பது, சமநிலை அற்ற தளத்தில் நடை பழகுதல், Tai chi பயிற்சிகள் பயன்கள் : 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக்கியமாக பழக வேண்டிய உடற்பயிற்சி முறை அடிக்கடி கீழே விழுதலை தடுக்க பயன்படும்
4.இலகுத் தன்மைக்கான பயிற்சி (flexibility training)
எடுத்துக்காட்டு தசைநார்களை இழுத்து விடுதல்(stretching exercise) யோகாசனங்கள்
பயன்கள் :மூட்டுகளை இலகுவாக அசைக்க பயன்படுகிறது உடலமைப்பை சரியான முறையில் வைக்க பயன்படுகிறது(posture maintanance) உடற்பயிற்சியின் நன்மை தீமைகள் : நன்மைகள்: உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதால் உடல் பல்வேறு நன்மைகளை அடைகிறது.
உடல் நலம்:
எடை குறைப்பு/ அதிகமாகாமல் தடுப்பது இருதயம் சீராக இயங்க உதவுகிறது. சர்க்கரை புற்றுநோய், பக்கவாதம் போன்ற பெரு நோய்கள் வராமல் தடுக்கிறது.
மனநலம் :
மன அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்சைட்டி டிப்ரஷன் போன்ற மன நோய்கள் குறைக்க உதவுகிறது. தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அளிக்கிறது. மூளை செயல்பாடுகள் அதிகரிக்க உதவுகிறது. அனைத்திற்கும் மேல் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. தூக்கத்தின் தன்மை மற்றும் அளவை மேம்படுத்துகிறது. தீமைகள்:
1. Injury risk: தவறான அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி முறைகள் தசை மற்றும் தசைநார்களின் பாதிப்பு ஏற்படுத்தும் அதிகப்படியான பயிற்சி ஓய்வில்லா அதிகப்படியான பயிற்சி சோர்வு பலவீனம் தூக்கமின்மை மனச்சோர்வு போன்றவைகளை உருவாக்கும்.
2.உணவுமுறை பாதிப்புகள்: அதிகப்படியான பசி அதிக உணவு உட்கொள்ளுதல் எடை கூடுவதற்கு வாய்ப்புகள் போன்றவை ஏற்படலாம்.
3. நேரம் மற்றும் பொருட்செலவு: பயிற்சிக்கான தகுந்த நேரம் ஒதுக்குதல். சில பயிற்சிகளில் ஈடுபட தேவைப்படும் பொருட்செலவீனம்( for gym and gear)
மனநல பாதிப்புகள்: பயிற்சி தொடர முடியாமல் போகும்போது மன அழுத்தம்,அதிருப்தி, தூக்கமின்மை, போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
குறிப்பு :
உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் மருத்துவர் அல்லது இயன் முறை மருத்துவரின் ஆலோசனை படியும் பரிந்துரை படியும் பயிற்சிகளை தொடங்குவது சாலச் சிறந்தது. உடற்பயிற்சிகள் ஒவ்வொருவரின் உடல், மனம் மற்றும் அவரவர் வாழ்வியல் முறைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்ட வேண்டிய ஒன்று.
முன்பே குறிப்பிட்டது போல நல்ல திட்டமிட்ட உடற்பயிற்சிகள், இயற்கையான ஆரோக்கியமான உணவு முறை, ஆழமான உறக்கம் குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது நல்ல நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுதல் இவை யாவும் நம்மை ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வழி செய்யும். இயந்திரங்களுடனே வாழ்ந்தாலும் இயல்பாக இருக்க முடியும்.
மரு.க. சவிதா MPT.,(CARDIO RESPIRATORY) MSc(Psy).,PFRP., MIAP.
இயன் முறைமருத்துவர்
VISHNUMITHRA PHYSIO CARE PAIN AND REHAB CLINIC.
add a comment







