சினிமா

மந்திரத்தில் பழுத்த மாங்காய் அல்ல ‘தந்த்ரா’

114views
தந்த்ரா / திரைவிமர்சனம்
தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் நடக்கும் அரதப்பழசான கதைக்கு திரைக்கதை அமைத்து ஆன்மீக முலாம் பூசி வந்திருக்கும் படம் ‘தந்த்ரா’
புதையல் பற்றிய ஒரு பழைய ஓலைச்சுவடி கிடைக்கிறது. அந்த புதையலை அடைய நினைக்கிறாள் ஒரு மந்திரகார பெண் கருடீஸ்வரி. இதற்க்கு மத்தியில் சுரேஷ் என்கிற இளைஞன் தன் தாய்மாமன் வீட்டிற்கு வரும்போது அபிராமி என்கிற பெண்ணை பார்க்கிறான். அவளை காதலிக்கிறான். திருமணம் செய்துகொள்ள ஆசைபடுகிறான். இந்த அபிராமி விரைவில் சாகப்போகிறாள் என்கிற அதிர்ச்சி தகவல் வருகிறது. அபிராமியின் அப்பா சொந்த அப்பா இல்லை என்கிற உண்மை தெரிய வரும்போது யார் அவர்களுடைய அப்பா, புதையலுக்கும் அபிராமிக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா..புதையல் கடைசியில் யாருக்கு கிடைத்தது, சுரஷ்ஷின் காதல் நிறைவேறியதா…என்பதே படத்தின் கதை.
ஹபிஸ் S.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எலிசா, முகேஷ், M.முரளி படத்தொகுப்பை கவனிக்க, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன் , சத்தியசீலன் எழுதி இருக்கின்றனர்.
பின்னணி இசை மற்றும் காதல் டூயட் ,சிவன் பாடல் என இரண்டு பாடல்கள் வழி கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர்.
S ஸ்கிரீன்ஸ் க்காக தயாரித்து இயக்கி இருக்கிறார் வேதமணி.
அன்பு மயில்சாமி படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சுரேஷ் பாத்திரத்தில் அவரால் நடிக்க முடிந்திருக்கிறது. கதாநாயகியாக சிட்டாதர்ஷன் அழகாக பொறுத்தமாக பொருந்தி போகிறார்.  லொள்ளுசாபா சாமிநாதன், ஜாரா சுந்தரேசன் சிரிக்கவைக்க மெனக்கெடுகின்றனர்.
வசனம், காட்சிகளில் தெளிவின்மை, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தாமல் விட்டிருப்பது, திரைக்கதையில் அக்கரையில்லாமல் இருந்தது என சில பல ஓட்டைகள் தெரிந்தாலும் முகம் சுளிக்கும் காட்சிகளோ அருவருப்பான வசனங்களோ இடம்பெறாமல் வந்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று.
மொத்தத்தில் மந்திரத்தில் பழுத்த மாங்காய் அல்ல இந்த ‘தந்திரா’
-நாகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!