கட்டுரை

தெருப்பாடகன் கும்பிட்ட அம்மாயி

217views
பாரி கபிலன் எழுதிய ‘அம்மாயி கும்பிட்ட சாமி’ என்ற கவிதை தொகுப்பை வாசிக்க நேரிட்டது.  மேற்போக்காக பார்த்தால் இது ஒரு சுயசரிதை போல் தோன்றும். அவரே தன் கவிதையை “ எழுத படிக்க தெரியாத தந்தையின் வலியிலிருந்து பிறந்த நதி என்கிறார். உள்ளே போகப் போக 21ம் நூற்றாண்டிலும் இந்திய சமூகத்தை ஆட்சி செய்யும் அசிங்கத்தை அழுக்கை மூத்த பொய்யை புதைக்க எழுச்சியூட்டும் கவிதைகள் என்பதை உணர்ந்தேன்.  பிற கவிதை தொகுப்பிற்கும் இதற்கும் உள்ள ஒரு வேறுபாட்டையும் உணர்ந்தேன்.  அவைகள் நெஞ்சை அள்ளலாம், காசுக்காக“கவிதைக்கழகு பொய்யெனக் கூறி மகிழலாம்.  ஆனால் பாரிகபிலன் கவிதைகள் பாரதி, ஷெல்லி வழியில் கவிதைக்கழகு மெய்யே என்பதை வரிக்குவரி முழங்குகிறது. சில கவிதைகள் “ மலம் அள்ளும் கைகளை கொடிறுடைக்கும் கூண்கையாக்கி விடுகின்றன. சாதி ஆணவ நெஞ்சை முள்ளாய் குத்துகின்றன.
அந்தவொரு வாத்தியாருக்கு மட்டும் நான் படிக்க கூடாத சாதி (என் சிறு வயது) அம்மாயி (பாட்டி) பற்றிய கவிதைகள் உணர்ச்சியமானவை. வாசித்து முடித்தவுடன் கசியும் கண்ணீரை துடைக்காமல் தாண்ட முடியாது. தெய்வ நம்பிக்கை பற்றிய இந்திய பண்பாட்டின் இன்னொரு பரிமானத்தை காட்டுகிறது. பாட்டிக்கு கருணைதான் குலதெய்வமாக உள்ளது. ‘ குடிக்கிற தண்ணியில குளிக்க இறங்காதே’ என்ற வாசகம் இந்துத்வா பண்பாடு, இந்தியாவின் பண்பாடல்ல என்ற அரசியலை போதிக்கிறது. பாட்டிக்கு கருணைதான் குல தெய்வம். பேரனுக்கோ பாட்டிதான் தெய்வம். ‘தெருப்பாடகன் கும்பிட்ட அம்மாயி’ என்ற தலைப்பு ஒரு கவிஞனை தரம் தாழ்த்துவதாக கருத வேண்டாம். கவிதையில் மெய் நயமிருக்க வேண்டும். இசை இருக்க வேண்டிய அவசியமில்லை. பாடல் என்பது கவிதை நயமும் இசையும் இணைந்து நிலைப்பது. கேட்போர் மனனம் செய்யாமலே மனதில் பதியும் தன்மை கொண்டது.

அடுத்து மெய் என்பது எளிதில் தென்படாது வர்க்க போராட்ட களத்திலே தேடி மார்க்சால் கண்டுபிடித்த ஒரு மெய், முதலாளித்துவமென்பது, ஒருவனது உழைப்பே அந்நியமாகி, அவனை அடிமையாக்கி விடுகிற உற்பத்தி முறையாகும், பாரிகபிலன் எழுதிய அரிசிகளின் கதை கவிதையில் ‘எங்கள் அரிசியை உங்கள் கடைகளில் வாங்குகிறோம்’ என்ற வரிகள் உழைப்பு அந்நியமாகும் பேருண்மையை உணர்த்திவிடுகிறது.
இதில் உள்ள பல கவிதைகள் சினத்தையும் நகைப்பையும் வெளிப்படுத்துவன. அனிதாவின் தற்கொலை, ‘ஆக்கிரமிப்பிற்கு கீழேதான் கூவம் நதி ஓடுகிறது. முக்கியமானவர்கள் பட்டியல் கவிதை ‘ பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும இலமே’ என்ற சங்க காலம் ஆசைப்பட்ட பண்பை குறிக்கிறது. இதில் உள்ள கவிதைகள் அனைத்தும் வாசிப்போரின் மனதை விசாலப்படுத்துகிறது.
வே. மீனாட்சி சுந்தரம்

அம்மாயி கும்பிட்ட சாமி – பாரிகபிலன் விலை ரூபாய் 130.
தொடர்பு 9840303575

முகநூல் பதிவு

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!