சினிமாவிமர்சனம்

மொக்க படம்னு சொல்லலாமா DD ரிட்டன்ஸை

130views
திரைவிமர்சனம் :
ஆர்.கே.எண்டெர்டைன்மெண்ட் C ரமேஷ் குமார் தயாரிப்பில் வந்திருக்கும் நகைச்சுவை  படம்  DD ரிட்டன்ஸ்.
சந்தானம் அண்ட் டீமின் காமடி அல்ட்ராசிட்டி தான் படம் முழுதும் வியாபித்திருக்கிறது.
‘தில்லுக்கு  துட்டு’ படத்தின் மூன்றாவது பகுதி என்று சொல்லிக் கொண்டாலும் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும்  துளிக் கூட சந்ம்பந்தமே இல்லை.
விளையாட்டாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் விளையாட்டு கதை பின்னணியில்.  அதற்காகவே இந்த குழுவினரை பாராட்டலாம்.
ஒரு பெரிய மனிதரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கும் ஒரு கோஷ்டி. அதை எடுத்து செல்லும் வழியில் இன்னொரு கோஷ்டியிடம் சிக்கிக்கொள்ள தப்பிக்கும் போது ஒரு பாழடைந்த பங்களாவிற்குள் செல்ல நேர்கிறது.  அந்த பங்களாவில் தான் விளையாட்டே  ஆரம்பமாகிறது. என்ட்ரி வழியாக உள் நுழைந்து எக்ஸிஸ்ட வழியாக வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கூடிய விளையாட்டில் மூன்று சுற்றுகள் இருக்கிறது.  இதையெல்லாம் கடந்தால் தங்களின் பணத்தையும் அதற்கு இணையாக மூன்று மடங்கு பணத்துடன்  வெளியேற முடியும்.   ஒட்டு மொத்த டீமே அந்த பங்களாவுக்குள் வந்துவிட விளையாட்டு சூடு பிடிக்கிறது. ஹீரோ, ஹீரோயின், வில்லன் டீம் என எல்லோரும் அந்த பங்களாவில் இருந்து வெளியேறினார்களா இல்லையா என்பதை  கிளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் உடன் சொல்லி முடிக்கிறார்கள்.
கதை பாண்டிச்சேரியில் நடப்பதாக சொல்லப்படுகிறது.  பேய்களுடன் விளையாட்டா என ஆச்ரயத்துடன் நாம் படம் பார்க்க ஆரம்பித்தால் வசனம் நடிப்பு என பலவிதங்களில் நம்மை  பயமுறுத்தாமல்  சிரிக்க வைக்க மட்டுமே முனைத்திருப்பது பாராட்டிற்குரியது.
சந்தானத்தின்  நடிப்பு வழக்கம் போல ஸ்கோர் பண்ணும் ரகம்.  கதாநாயகி சோபியாவாக வரும் சுரபி நன்றாகவே  நடித்திருக்கிறார்.  ரெடின் கிங்ஸ்லி ஆரம்பக்காட்சி முதல் இறுதி கட்சி வரை தன்னை அந்த பாத்திரமாகவே மாற்றிக்கொண்டு நடித்திருப்பது மனுஷன் இன்னும் ஒரு பெரிய ரவுண்ட்க்கு தயாராகிறார் போல.  சேது, மாறன், மொட்டை ராஜேந்திரன், சாய் தீனா, தங்கதுரை,  பெப்சி விஜயன், முனீஷ்காந்த் மற்றும் வெள்ளைக்கார  பேயாக வருபவர்களும், குழந்தை பேயாக வரும் பேபி பிபின் இப்படி எல்லோரும் தங்கள் பங்கை சரியாகவே செய்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
தீபக் குமாரின் ஒளிப்பதிவு சிஜி காட்சிகளுக்கு துணி செய்திருகிறது.  AR மோகனின் கலையும், NB ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் தொய்வில்லாமல் காட்சிகளுடன் நம்மை ஒன்றை செய்கிறது.
ஓப்ரா இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை கொஞ்சம் காமெடி  கலந்து கொடுத்திருப்பது இளைஞர்களை கவரும்.  அசல் கோலாறு , துரை ஆகியோர்  பாடல்களை எழுதி இருக்கின்றனர். பாராட்டும் படியாக இருக்கிறது.
எல்லாம் சரியாக இருந்தாலும்  வலுவிழுந்த கதை, லாஜிக் இல்லாத திரைக்கதை, சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று மொக்கை ஜோக்குகளை அள்ளி  விட்டிருப்பது …..இப்படி சில குறைகளை நாம் சுட்டிக்காட்டினாலும் நம்மையும்   பல இடங்களில் கைத்தட்டி சிரிக்க வைத்திருக்கும் இயக்குனர் S பிரேம் ஆனந்தை மகிழ்வுடன் கைக்குலுக்கி நாம் பாராட்டலாம்.
DD ரிட்டன்ஸ் – மொக்கை திரைப்பட கேட்டகிரியில் இருந்து தப்பி இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!