சினிமாவிமர்சனம்

நல்ல நகைச்சுவை படமாக மாறியிருக்கும் அபாயத்தில் இருந்து தப்பி இருக்கும் சத்திய சோதனை

145views
சத்திய சோதனை – திரை விமர்சனம்:
ஒரு கிடாயின்  கருணை மனு – இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது.
அய்யப்பன் பூஜையுடன்  கதை ஆரம்பமாகிறது.  பாடல் முடியும் போது ஒரு கொலை நிகழ்கிறது . அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கும்  படமே சத்திய சோதனை.
கொலைக்கான காரணம் என்ன என்பதை குற்றவாளிகள் மூலம் ஒரு வரியில் சொல்லி விட்டு வேறு திசையில் பயணிக்கிறது  திரைக்கதை.
பிரதீப் தன்  காதலி பிரவீனாவை சந்திக்க  செல்லும் போது  ஒரு  கொலையை பார்க்கிறார்,  பிணத்தின் அருகில் இருந்த செல்போன், கழுத்தில் கிடந்த செயின் போன்றவற்றை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.  கொலையை விட்டுவிட்டு காவல் துறையினர் பிற நகைகளை  தேடுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதற்காக பிரதீப்பை போலீஸ் ஸ்டைலில் விசாரிக்கின்றனர். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் படத்தை ஓரளவிற்கு இட்டுச்  செல்கிறது.
பிரதீப்பாக நடித்திருக்கும் பிரேம்ஜி சிரிப்பை வரவழைக்க தன் பிரத்தியேக பார்முலாவை கையாண்டிருக்கிறார். சில இடங்களில் மிர்ச்சி சிவாவை இமிடேட் செய்த்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
ஹீரோயின் ஸ்வயம் சித்தாவின்  காட்சிகளை இயக்குனர் கூட்டியிருக்கலாம். நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் குறைவு.
இன்போர்மராக வரும் ராஜேந்திரன் கவனிக்க வைக்கிறார். போலீஸ்காரர்கள் சித்தன்மோகன் குபேரன் கதாபாத்திரத்திலும், செல்வமுருகன் மஹாதேவன் கதாபாத்திரத்திலும் வந்து முழுப்படத்தையும் தங்கள் தோளில் சுமந்திருப்பது போன்ற பிரமையை உண்டுபண்ணுகின்றார். அது உண்மையும் கூட.
பாட்டியாக நடித்திருப்பவரின் நடிப்பை பாராட்டலாம். நீதிபதியாக கு.ஞானசம்பந்தன் நடித்திருக்கிறார்.
சுரேஷ் சங்கையாவின் இயக்கம் எதார்த்த மனிதர்களையும், குக்கிராமங்களில்  செயல்படும் காவல் நிலையங்களின் தன்மையையும் கண் முன் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ரகுராமின் கவனிக்கும் படியான இசையோ, ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவோ படத்தின் வெற்றிக்கு ஓரளவிற்கு  துணையாக நிற்கின்றன.  வேல்முருகன் படத்தொகுப்பு பரவாயில்லை.
சத்திய சோதனை – நல்ல நகைச்சுவை படமாக மாறியிருக்கும் அபாயத்தில் இருந்து தப்பி இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!