சிறுகதை

லாரி

367views
அந்த இயந்திர யானை ஊருக்குள் நுழைந்த பொழுது வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.பள்ளம் மேடு உள்ள பகுதிகளில் அது ஆடி அசைந்து வருவது ஒரு யானை வருவது போலவே இருந்தது.
சிவனேசன்அந்தயானையை பார்த்துக்கொண்டிருந்தான்.இயந்திரங்கள் எப்படி உருவாக்கப்படும் அதன் வடிவம் எப்படி அமைக்கப்படும் எனமாமா கதிரேசனிடம் அவன் கேட்டான்.
அதெல்லாம் எனக்கு என்னடா தெரியும் படிச்சவங்க கண்டுபிடிச்சி உருவாகி இல்ல இல்ல ஒவ்வொரு விலங்குகளின் உருவம்ஒவ்வொரு வண்டிமாதிரி உருவாக்கியிருப்பார்கள். அந்த அடிப்படையில் லாரி என்பது யானையின் உருவத்தை ஒத்தது என சொன்னது கேட்ட சிவா ஒரு கணம்யோசித்து விட்டு வியந்தான்..
கதிரேசன் ரொம்ப வருடம் கிளீனராக வேல பாத்து லாரி ஓட்ட பழகி பழைய லாரியை ராமசாமி செட்டியாரின் குடோனில் இருந்தபோது வாங்கினான். இந்த லாரி இவன் கை வந்து சேர்ந்த நேரம் நல்ல மாற்றம் கையில் பணம் புரளத்தொடங்கியது கல்யாணம் காட்சின்னு மேல வர காரணம் இந்த லாரிதான்.
அந்த லாரிதான் மூன்று தலைமுறையாக அவர்களின் சொந்தம் சொத்து எல்லாம் வீட்டில் இருப்பதை விட லாரி செட்,சரக்குஎடைபோடும்இடம்லாரிஆபீஸ், பழைய லாரி சாமான் விற்கும் சந்தை, ரேடியேட்டர் பேரிங் மெக்கானிக் செட் டயர் வல்கனைசிங் கடை இப்படியாக கதிரேசன் வாழ்க்கை.லாரியும்அழுக்கும் நிறைந்து.
கல்யாணமாகி சம்சாரம்செல்வி மூனுமுறை உண்டாகி கரு தங்கல. எத்தனை வைத்தியம் அந்த உடம்பு அதிலே சோர்ந்து விட்டது.கதிரேசன் வீட்டில் இல்லாத சமயங்களில் அவள்தம்பி சிவனேசன் வந்து தங்கி இருப்பான்.அவனும் இப்போ எல்லாம் லாரிமேல காதல் வந்து மாமா கூடவே போயிருவான். தனிமையில் இருக்கும் செல்விக்கு அக்கம் பக்கம் யாருடனும் பேச எவ்விதமான விருப்பம் இல்லை.
சோகப்பாடல் கேட்பது அவளுக்கு ஆறுதல். கண்ணீர் வடித்துக் கொண்டு பாடலைச் சேர்ந்து பாடுவது அவளுக்கு விருப்பமான ஒன்று நிறையபேர் வானுயர்ந்த சோலையிலும், மணியோசையிலும் திளைத்து ப்போயிருப்பார்கள்.செல்விக்கு கதிரேசன் மேல் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது.
குடி ,சீட்டு என அவன் வீடு தங்குவது குறைந்து சமீபமாக வீட்டுலயே,இல்லாத அளவு ஆகிவிட்டது.சிவனேசனை கூடவே இருடா உங்க மாமா சோலி சரியில்ல அவரு எங்கெங்க போராரு கண் வெச்சுக்க என சொல்லுவாள் செல்வி.
அந்த லாரி ஆபீஸ் முழுவதும்பரபரப்பு கடற்கரைபண்டகச்சாலை போல் பொருட்கள் வாங்குவதும் கொடுப்பதும்கச்சாத்து எழுதுவதும், பண்டல் போடுவதும் சாக்குமூட்டையில் கட்டுவதும்என்று அல்லோலகல்லோலப் பட்டது.
பள்ளிக்கு விடுமுறை விடும் நாட்களிலெல்லாம்தன் அக்காவின் கணவர் கதிரேசன் மாமாவுடன் லாரியில் செல்வது அவனுக்கு அலாதியான பிரியம்.கதிரேசன் மாமாவுடன் சேர்ந்து லாரிதார்ப்பாய் மடிப்பது சைடுபார்த்து சொல்வதுஅவர் வண்டி கழுவ வருகின்ற
பொழுதுஆற்று ஓரத்தில் நின்று அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பதுபோன்ற வேலைகளில் அவன்விரும்பி ஈடுபடுவான்.அவன் வயதை ஒத்த மற்றவர்களெல்லாம் நடிகர்களின் படம் விளையாட்டு வீரர்களின் படம் நடிகைகளின் படம்விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வைத்தும்புத்தகத்தில் கொள்ளும் நோக்கிலும் மறைந்து வைத்தும்பார்த்து ரசிக்கின்ற பருவத்தில் இவனோ லாரிகளின் விதவிதமான படங்களை எல்லாம் எடுத்து தன் பைக்குள் வைத்திருப்பான்.
எப்பொழுதும் சிவனேசனுக்கு சரக்கு லாரி ஆச்சரியமூட்டும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.ஸ்டார்ட் செய்யும் போது அதனுடைய உறுமல் சத்தம்.உருண்டையாடீசல் டேங்க் லாரியின் முக அமைப்பை வைத்து சில லாரிகளை ஆண் என்றும் சில லாரிகளில் பெண்கள் என அதன் அழகை லயித்து பார்த்துக் கொள்வான்.லோடு இறக்கிவிட்டு எம்டியாக வருகின்ற வேளையில்கிராமப்புறங்களில் ஆளுக்கு அஞ்சு ரூபாய் வசூலித்து மாமாவிடம்கணக்காக ஒப்படைப்பான்.
பல ஊர்களுக்கு அவன் செல்லுகின்ற வாய்ப்பை இந்த லாரியில் செல்வதனால் தான் கிடைத்திருக்கிறது பலவிதமான உணவுகளை அவர் சாப்பிட்டு இருக்கிறான்.சென்ற பல ஊர்கள் அங்கு கிடைத்த வித விதமான உணவுகள் இதுபற்றி எல்லாம் பள்ளி திறந்தவுடன் அவன் நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக் கொள்வான்.
லாரி ஆபீஸ்பலமுறை அவன் சென்றிருக்கிறான்லோடு மேன்கள் ஒப்பந்த முறையில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போதுலாரி டிரைவர் எல்லாம் சீட்டு விளையாடுவார்கள்.அங்கே மாமா வரக்கூடாது எனச் சொல்வார்.
டீக்கடையில் டீவாங்கிவர சொல்வார்கள் சிகரெட் வாங்கி வரச் சொல்வார்கள்.ஆனால் அவன் அங்கே வரக்கூடாது என்று அவனை அழைத்துக் கொண்டு போய் வண்டியில படுத்துக்கஎன்று சொல்வார்.அதிகமாக பணம் விட்டார் என்று செல்வியிடம் போட்டுவிடுவான்ற காரணத்திற்காக கதிரேசனுக்கு சிவனேசன் அங்கே வருவது பிடிக்காது.
எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்லும் மாமா ஒரே ஊருக்கு மட்டும்மட்டும் அவனை அழைத்துச் செல்வதில்லை.அவனை எல்லோரும் கேலி பேசுவார்கள்.மாமா உன் பொண்ண கொடு நீ எப்பத்தான் பாட்டு பாடப் போறேமாமா உனக்கு பொண்ணு பெத்து தர மாட்டேங்கிறார் என்று சக ஊழியர்கள் அவனை கேலி செய்வார்கள்.
வெள்ளி காட்டு மலை பகுதிக்கு செல்லும்போது மட்டும் இவனை அழைத்து செல்வதில்லை.நைட்டுக்குசினிமா பார்ப்பதற்கு காசும் காதர் கடை பிரியாணியும் புரோட்டா சால்னா சாப்பிடுவதற்கு காசும் கொடுத்த மகிழ்ச்சியில் அதைப்பற்றி அவரைப்பற்றி அவன் யோசிப்பதே இல்லை
ருநாள் வண்டியை கழுவிக் கொண்டு இருக்கும்போது லாரியின் கழுத்துப்பகுதியில் ஒரு புகைப்படத்தைக் கண்டான் அதில் ஒரு பெண்ணும் அவள் கையில் ஒரு குழந்தையும் இருந்தது.அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவன் பார்த்த பல. திரைப்படங்கள் பலவாறாக சிந்திக்க வைத்தன.
சிவனேசன் டவுசர் இருந்து கைலிக்கு மாறி இருந்தான்.
அன்று லாரி ஆபீஸில் கதிரேசன் பரபரப்பாய் காணப்பட்டார்.மாமூலாக அவர்கள் செல்லும் மலைப் பிரதேசத்திற்கு செல்லும்முன்னர் திருச்சி போய் வரச்சொல்லி அந்த லாரி ஆபிசில்தகவல் வந்தது.
ஏற்கனவே திருச்சி போகிற வண்டி பழுதடைந்து காரணத்தினால் இந்த வண்டியை திருச்சியில்லோடு இறக்கியபின் வழக்கமாக செல்லும் செல்லலாம் என முதலாளிசொல்லிவிட்டார்.
இவன்தான் லாரியின் முதலாளி ஆனால் வழக்கமாக சரக்கு தந்து தொழில் தருவதால் அவர் முதலாளி.வேற வழி இல்லை திருச்சிக்கு அவனை அழைத்து சென்று அப்படியே வெள்ளிமலை காட்டுக்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று. இனி வெள்ளி மலை காட்டில்
வெள்ளிமலை காடு மேகம் தொட்டுக்கொண்டு உரசும் அற்புதமான தேயிலைத் தோட்ட பகுதி. சொர்க்கம் எது என்று கேட்டால் அது வெள்ளிமலை காடு குளிர்நம்மை உறைய வைக்கும்கதிரேசனும் சிவாவும் லாரியை விட்டு இறங்கி வந்ததும் பெரியவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் எல்லோரும் கூடி வந்த லாரியின் பின்னால் நின்றார்கள்.கதிரேசன் லாரியின் பின் கதவை திறந்துவிட்டான் சிவா சிட்டையில்உள்ளடி பெண்களில் யார் யாருக்கு என்ன பொருள் என்று கூவிக்கூவி எடுத்துக் கொடுத்தான்.தரையில் வாழும் வாழ்க்கை யல்ல மலை வாழ்க்கை.
160 ரூபாய் சம்பளத்தில்பணியாற்றும் மக்கள் தங்கியிருக்கின்றனர்.
மொத்தம் நூறு வீடுகள் இருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்ஒரு இரண்டு மூன்று கடைகள்பேருந்து நிறுத்தம்உண்டு.
வாரத்திற்கு ஒரு பேருந்து4 நாளுக்கு ஒருமுறை இந்த லாரி அவசரத்துக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் ஜிப் வர வைக்க வேண்டும்.அவருக்கு சொலையாய்ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.இப்படியாக சின்ன ச்சின்ன எஸ்டேட்டுகள் ஆக வெள்ளிமலை காட்டில் பலஸ்டேட் உள்ளன.
தனியார் முதலாளிகள்வெள்ளையர் காலத்தில் வாங்கிப்போட்ட எஸ்டேட்டில்மேனேஜர் என்றும் கங்காணி என்றும் துன்ப படுத்துவதற்கு பலர் அங்கு இருந்தார்கள்.இந்த வாழ்க்கைதான் எவ்வளவு கொடூரமானது என்றுசிவனேசன் அந்த வெள்ளிமலை காட்டில் போய் புரிந்துகொண்டான்.இயற்கை அழகும்காடுகளும் மரங்களும் செடி கொடிகளும் சோலைகளும் நதிகளும்பார்ப்பதற்கு மிகுந்த இனிமையானது.
சீதோசன நிலைரசிக்கத்தக்க வசீகரமானது.ஆனால் அங்கேயே வேலை செய்து வாழும் வாழ்க்கை கல்வி சுகாதாரம் மருத்துவம்இதற்கான எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் அவர்கள் படுகின்ற ரேஷன் வாழ்க்கைசொல்லில் வடிக்க முடியாத துயரம் என சிவனேசன் நினைத்துப் பார்த்தான்.
இங்கு எப்போதோ கட்டப்பட்ட தேவாலயத்தில்வாரம் ஒருமுறை போதகர் வந்து எல்லோருக்கும்நற்செய்தியும் உணவும் வழங்கி விட்டு செல்வார்.ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரில் இருக்கும் சுகாதார நிலையத்தில் மாதம் ஒருமுறை மருத்துவர் ஒருவர்மற்ற நாட்களில் செவிலியர் அங்கு தங்கி வைத்தியம் பார்ப்பது உண்டு
.அவசர காலத்தில் மலையிலிருந்து கீழே இறங்கும் முன்பு எத்தனையோ உயிர்கள் இறந்து போயிருக்கின்றன.14 மணி நேர வேலைகட்டன் சாயா குண்டுஅரிசி சாப்பாடுஇந்த லாரி அங்கு வரும் போதெல்லாம் திருவிழா போல இருக்கும்வேண்டுகின்ற பொருளையெல்லாம்வருகிற அற்புதமானலாரி இவர்கள் உணர்வோடு கலந்த உறவாகவே இருந்தது.
விமலா ஒரு கடிதம் எழுதி லாரியில் வைத்து விட்டாள்.அதில் அவள் காதலித்து ஏமாந்த கதை வயிற்றில் புள்ளை வளர்ந்த கதை எல்லாம் இருந்தது.
எஸ்டேட்டுக்கு விறகு எடுப்பதற்காக கீழிருந்து கொண்டுவரும்லாரியில் மனிதாபிமானத்தோடு கதிரேசன்அவர்கள் சொல்லும் பொருட்களையெல்லாம் வாங்கி வருவான்.ஒவ்வொரு முறையும் கதிரேசன் வருகின்ற பொழுது எல்லோர் மனதிலும் சந்தோஷம் பொங்கும்.ஆனால், விமலாவை பார்த்த பொழுது கண்ணீர்அவனை அறியாமல் வெளியே வந்தது.இதை சிவனேசன் இடம் சொல்லலாமா அவள் ஏமாற்றப்பட்டது.
அவனை தேடி அமைந்தது விமலா உதவி கேட்டது இதெல்லாம் சொன்னால் அவன் புரிந்து கொள்வானா அக்காவிடம் வேற ஏதாவது சொல்லிவிடுவானா என்ற கலக்கத்தில் இருந்தான்.சிவனேசன் விமலாவின் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.
மாமா இந்த விமலா அக்காவையும் குழந்தையையும் அந்த வீட்டுக்கு கூட்டிபோவோம் மாமா என்று சொன்னான்.
ஏற்கனவே விமலாவின் கடிதத்தை படித்த சிவனேசன் எதுவும் கேட்கவில்லை பேசவில்லை.ஊர் மக்களை பரிதாபத்தோடு பார்த்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அந்தப் பெண் குழந்தையை விரல் பிடித்து கூட்டி வந்து தன் அக்காவிடம் ஒப்படைத்தான்.
விமலாவை அக்காவிற்கு அறிமுகப்படுத்திஎஸ்டேட் மேனேஜரால் பாதிக்கப்பட்ட இவர்கள் இனி நம்ம வீட்டில் தான் இருப்பார்கள். அந்த குழந்தை நமதுமகளைப் போல வளரும் என பெரிய மனிதனைப் பேசினான்.கதிரேசன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் .
லாரி தானே இந்த குழந்தையை நமக்கு தந்தது புது சொந்தத்தை நமக்கு தந்தது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.சிவனேசன் லாரி டிரைவர் சீட்டில் குழந்தை வைத்துக்கொண்டு ஹாரன் அடித்து மகிழ்ந்தான்
  • யாழ் எஸ்.ராகவன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!