சென்னை

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

169views

சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று இலவசமாக பயணம் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான, மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

இதையொட்டி, இன்று மதியம், 2:00 மணியில் இருந்து, இரவு, 11:00 மணிவரை, மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையம் – திருவொற்றியூர், விம்கோநகர், பரங்கிமலை – சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயிலில், பொதுமக்கள் ஏராளமானோர் பயணம் செய்து மகிழ்ந்தனர். பலர் தங்களது குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக கொரோனா தொற்றின் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பயணம் செய்ததுடன், தங்களது செல்போனில் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!