புதிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா ஆரம்பித்துள்ளார்.
கொரோனா தொற்றின் காரணமாக உலகமே செயல் அற்ற நிலையில் இருப்பது போலவே திரைத்துறையும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது. அதனால் தான் இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் பட வேலைகளுக்காக பணம் போட்டவர்கள், இனி திரைத்துறையின் நிலை, நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே தவிர ஏற்கனவே உள்ள சங்கத்தை அழிக்கும் நோக்கம் எதுவும் இதில் இல்லை. இந்தச் சங்கம் தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வதற்கும், முடிவுகளை எடுத்து திரையுலகை வழி நடத்தி செல்வதற்கும் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சங்கத்தின் நிர்வாகிகள் குறித்து எந்தவித முடிவும் செய்யப்படவில்லை. பல்வேறு ஆலோசனைகளை நடத்தி, பெரும்பான்மையின் அடிப்படையில் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சங்கம் முழுக்க,முழுக்க நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தானே தவிர ஏற்கனவே உள்ள சங்கத்தை அழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.