தமிழகம்

செல்போன் டார்ச் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை

63views
கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் விளக்குகள் பழுதாகி எரியாததால் விபத்தில் அடிபட்டு வந்தவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை 7மணியளவில் பள்ளக்காடு சாலையில் கெங்கவல்லி பகுதி சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேல் (70) அவரது நண்பர் இளங்கோ(55) ஆகிய இருவரும் டூவீலரில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து படு காயமடைந்தனர்.
உறவினர்கள் இருவரையும் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர் அப்போது அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை அளிக்கப்படும் அறையில் விளக்குகள் எரியவில்லை இதையடுத்து உறவினர்கள் செல்போன் டார்ச் லைட் அடித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டு உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின் விளக்குகளை பழுது நீக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!