தமிழகம்

ராஜபாளையம் அருகே, தனியார் குடோனில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

223views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியில், சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில், சேத்தூர் காவல்நிலைய போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேத்தூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டி – கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கார்மேகம் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அந்த குடோனுக்குள் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சேத்தூரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (42), ராஜா (34), புத்தூரைச் சேர்ந்த முத்துக்குமார் (30), சிவா (32), தென்காசி பீர்முகமது (50), கணேசன் (41), ராஜாராம் (55) உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!