தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

தலைநகரான சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிலர் சாலையோரம் தங்கினர். இதே போன்று, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பயணிகள் அங்கேயே படுத்துறங்கினர். சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக விளங்கும் பாண்டிபஜாரில் ஜவுளி கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் போன்றவை இரவு 9 மணிக்குள் அடைக்கப்பட்டன. சென்னையின் பிற இடங்களிலும் இவற்றை காண முடிந்தது. இரவு நேர ஊரடங்கால் திருச்சியின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், எந்நேரமும்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…!

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் பேருந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்க முடியாது எனவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என...
தமிழகம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு

'கரோனாவின் பாய்ச்சல் அதிகமான நிலையில், மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில், மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். வாய்ப்பு வசதியுள்ளவர்களும் அமைப்புகளும், அறக்கட்டளைகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.   இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை: 'கரோனா தொற்றின் கொடுவேகம் மிகப்பெரிய அலையாக இரண்டாம் முறை நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்கும், துன்பத்திற்கும் உரியதாகும். பொருளாதார வீழ்ச்சி, தேக்கம் இதன்மூலம் தவிர்க்க முடியாத முக்கிய விளைவு என்றாலும், உயிர் காப்புக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும். இத்தொற்றை அறவே நீக்கி பழையபடி ஒரு இயல்பு நிலையைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை.   மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் எனவே, மிகுந்த...
தமிழகம்

நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் – போலீசார் விசாரணை

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த காக்கூரை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மனைவி அழகு (71). இவர்களுக்கு ஒரு மகள் உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தம்பதியினர் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில, கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிபட்டு வந்த அழகு, கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவிக்காத மூக்காண்டி, சடலத்தை தானே தூக்கிச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தார். தகவல் அறிந்த கக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ராமையா, இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், நேற்று போலீசார், மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து, பிரேத...
தமிழகம்

சென்னையில் காவல்துறையினர் 200 இடங்களில் சோதனை

இன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படும் . பூங்காக்கள் , உயிரியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது . அதே போல் ஞாயிறு அன்று முழு...
தமிழகம்

“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்” என – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், தர்மபுரி ,சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ,அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சிராப்பள்ளி, மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம்...
தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகள், பால், மருந்து விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்முக்கிய செய்திகள்

வெற்றியை பிரதமர் கைகளில் ஒப்படைப்பேன்: குஷ்பு

''தேர்தலில், மிக பெரிய வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கைகளில் ஒப்படைப்பேன்,'' என, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க, வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.
தமிழகம்

தலைவர்களின் சொத்து மதிப்பு

அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது தலைவர்கள் தங்களது சொத்து மதிப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகம்

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை: பிரேமலதா

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
1 437 438 439 440
Page 439 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!