தமிழகம்

தமிழகம்

தொற்று நோயாக கருப்பு பூஞ்சை நோய் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

கொரனோ வைரஸ் தொற்று போல் கருப்பு பூஞ்சை நோயும் தமிழகத்தை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கும் கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று மதுரையில் மட்டும் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாகவும் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய்களை தொற்றுநோயாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய் என குஜராத் ராஜஸ்தான் ஒடிசா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகமும் தொற்றுநோய் என அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகம்

ஆன்ம லிங்கத்தை வைத்து இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள் -கொரோனா நெருங்காது -நித்தி அதிரடி ஆலோசனை.

சர்ச்சைகளுக்குப் பெயர் போன சாமியார் நித்தியானந்தா கொரோனா நோயை விரட்ட பல ஐடியாக்களை அள்ளி தெளித்துள்ளார். அதில், அடிக்கும் போது வலிக்காமல் இருக்கும் மருந்து போல, கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் இருக்க கேட் போட்டு நிறுத்த வேண்டுமா? ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள். கொரோனா உங்களை நெருங்காது, அத்துடன் நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து என்றும் கூறியுள்ளார். கொரோனா என்ற ஒற்றை சொல் பல உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்தது. கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியாமல் வல்லரசு நாடுகள் கூட திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த...
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி..!!

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுமட்டுமின்றி, 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதி இருந்தது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய்...
தமிழகம்

தேயிலை தொழிலாளர்களுக்கு கொரோனா.. பணிகள் நிறுத்தி வைப்பு!

உதகமண்டலத்தில் தேயிலை தொழிலாளர்கள் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தேயிலை தோட்டங்களில் களைக்கொல்லி அடிப்பது, கவாத்து செய்வது என பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தொழிற்சாலைகள் இயங்கவும், தேயிலை பறிக்கும் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

5 மாவட்டங்களில் அதிரடி ஆய்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணத் திட்டம் !!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதையே முதல் பணியாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர், அமைச்சர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடக்கி வைக்க உள்ளார். சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்ட அவர், சேலம் சென்று, அங்கு கொரோனா பரவல் தடுப்பு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். பின்னர் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்கிறார். அதன் பின் திருப்பூர் செல்லும் முதலமைச்சர், 12.15 மணிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைக்க இருக்கிறார். இதன்பின்னர் கோவை செல்லும் அவர், அங்கு கொடிசியா வளாகம், குமருகுரு கல்லூரி...
தமிழகம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்’ – மனுக்கள் மீது வீடுவீடாக அதிகாரிகள் விசாரணை

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி மக்களிடம் மனுக்களைப் பெற்ற அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாட்களில் அம்மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தார். தற்போது அவர் தமிழக முதல்வரானதை அடுத்து, தேனி மாவட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வரு கிறது. கம்பம் பகுதிகளில் கோட் டாட்சியர் நா.சக்திவேல் தலை மையிலான குழுவினர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த காமயக்கவுண்டன்பட்டி பேரூ ராட்சி பகுதியைச் சேர்ந்த மனுதாரர்களின் வீடுகளுக்குச் சென்று இக்குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபத்துக் காப்பீடு, இலவச வீட்டுமனை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மனுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. தகுதியுடைய மனுதாரர் களுக்கு உதவி கிடைக்க பரிந் துரை செய்யப்படும்...
தமிழகம்

சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை!!

சென்னை வியாசா்பாடியை சேர்ந்த 'வியாசை தோழா்கள்' எனும் அமைப்பைச் சோந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவை செய்து வருகின்றனா். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்வடசென்னை பகுதியில் 'வியாசை தோழா்கள்' என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஒருங்கிணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா் . குறிப்பாக ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவா்களுக்காக , ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருகின்றனா் . 30 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்ள இந்தக் குழுவில் உள்ளனர்....
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொலைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஸ்டொலைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த தொழிநுட்ப குழுவினரும்...
தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 19.5.2021 : நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்...
தமிழகம்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: உறவினர்கள் தகவல்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என போற்றப்படுகிறார். 1958 ம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர். இவரது இலக்கியப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீட்டை அரசு அளித்துள்ளது . அவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் திவாகரன், இளைய மகன்...
1 430 431 432 433 434 440
Page 432 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!