தமிழகம்

சிவகாசியில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

368views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் முருகன் காலனி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த அய்யாச்சாமி (47) என்பவர், சட்ட விரோதமாக நவீனரக பட்டாசு தயாரிக்கும் குழாய்கள், பட்டாசுகள் வைத்திருந்தது தெரிந்தது. போலீசார், அய்யாச்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!